தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் 2000 மரக்கன்று நடும் பணியின் துவக்க விழாவை திருநெல்வேலி மாநாகராட்சி ஆணையர் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ் இன்று துவக்கி வைத்தார்.
நெல்லை நீர்வளம் முன்னெடுப்பில் இந்தியா சிமெண்ட்ஸ் லிமிட்டட் உதவியோடு வி.எம்.சத்திரம் டெவெலப்மெண்ட் டிரஸ்ட் பங்களிப்பின் மூலமாக மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பாலம் முதல் நாரணம்மாள்புரம் ஆற்றுப்பாலம் வரை உள்ள பகுதியில் தற்போது கருவேல மரம், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள், துணிகள் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியானது நடைப்பெற்று வருகிறது.
இந்த நிலையில் சுத்தம் செய்யப்பட்ட பகுதிகளில் நாட்டு மரக்கன்றுகள் நடும் பணியின் துவக்கவிழா இன்று காலை 10:30 மணியளவில் மணிமூர்திஸ்வரம் பிள்ளையார் கோயில் அருகில் நடைபெற்றது. திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ் தலைமையில் இந்நிகழ்வானது நடைப்பெற்றது. இதில் சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் லிமிட்டட் நிறுவனத்தைச் சார்ந்த முதுநிலை மேலாளர்(மனித வளம்) ஆர்.நாராயணசாமி, சீனியர் மேலாளர் (கனிம வளம்) ராஜேஷ் , மேலாளர் எஸ்.சித்திரைவேல் மற்றும் மேலாளர் கே.என்.ஜிஜு ஆகியோரும், வி.எம்.சத்திரம் டெவலெப்மெண்ட் டிரஸ்ட் சார்பில் முனைவர்.ம.சுரேஷ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் மாநகராட்சி அதிகாரிகள், சுற்றுச்சூழல் இயக்கங்களைச் சார்ந்த ஆர்வலர் கலந்துகொண்டனர்.
பிரதமரின் ரோட் ஷோ நடைபெறும் பகுதி முழுவதும் ரெட் சோனாக அறிவிப்பு; பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பாலம் முதல் நாரணம்மாள்புரம் ஆற்றங்க்கரையோரங்களில் வெள்ளத்தை தாங்கக்கூடிய நீர் மருது, இலுப்பை உள்ளிட்ட நாட்டுமரக்கன்றுகள் நடப்படவுள்ளன. அந்த அந்த பகுதி மக்களின் பங்களிப்பின் மூலமாகவும், தன்னார்வலர்கள் மூலமாகவும் இந்த மரக்கன்றுகள் பராமரிக்கப்பட உள்ளதாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.