'Schezwan Dosa' இப்படி ஒரு சுவையில் தோசை சாப்பிட்டு இருக்கீங்களா..? ரெசிபி இதோ!

By Kalai SelviFirst Published Apr 24, 2024, 8:30 AM IST
Highlights

இந்த பதிவில் "ஷெஸ்வான் தோசை" எப்படி செய்வது? என்பதை குறித்து இப்போது பார்க்கலாம் வாருங்கள்..

பலர் காலை மற்றும் இரவு நேரங்களில் தோசை சாப்பிட விரும்புவார்கள். இதில் பல வகைகள் உள்ளன. பொதுவாகவே, முட்டை தோசை, வெங்காய தோசை, மசாலா தோசை மட்டுமே வீட்டில் செய்வார்கள். ஆனால், இன்று இந்த கட்டுரையில் ஒரு ஸ்பெஷல் தேசை பற்றி நாம் பார்க்க போகிறோம். அதுதான் ..'ஷெஸ்வான் தோசை' இதை நம் வீட்டிலேயே எளிதாக செய்யலாம் தெரியுமா..

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த தோசையை விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக, காரமான உணவுகளை விரும்புபவர்கள் இந்த தோசையை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். இதன் சுவை சாப்பிடுவதற்கு சற்று வித்தியாசமாக இருப்பதால் அனைவரும் விரும்புவார்கள். இதை நீங்கள் வெளியில் சாப்பிடுவதை விட..  வீட்டிலேயே ஆரோக்கியமாக முறையில் செய்து சாப்பிடலாம். சரி வாங்க இப்போது இந்த "ஷெஸ்வான் தோசை" எப்படி செய்வது? இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை குறித்து 
இப்போது பார்க்கலாம் வாருங்கள்..

தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 2 கப்
ஷெஸ்வான் சாஸ் - 1/4 கப்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1 கப்
நறுக்கிய முட்டைகோஸ் - 1 கப்
நறுக்கிய கேரட் - 1 கப்
கேப்சிகம் - 3/4 கப்
தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
ரெட் சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் - 1/4 கப்
பீன்ஸ் - 3/4 கப்
இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
நறுக்கிய  தக்காளி - 1
கருப்பு மிளகு தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். இப்போது இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அதன் பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், முட்டைக்கோஸ், கேரட், கேப்சிகம், ஸ்பிரிங் ஆனியன் மற்றும் பீன்ஸ் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். அதன் பிறகு ஷெஸ்வான் சாஸ், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், தக்காளி சாஸ், மிளகு தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இப்போது அடுப்பை அணைத்து விடவும். இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவவும். இப்போது அதில் மெல்லியதாக மாவு ஊற்றவும். இப்போது ஷெஸ்வான் சாஸ் தோசை முழுவதும் பரப்பவும். பிறகு, இருபுறமும் நன்றாக சுட்டு.. தயார் செய்த கலவையை தோசையின் மீது போட்டு சிறிது வெண்ணெய் சேர்க்கவும்..அவ்வளவு தான் அருமையான ருசியில் 'ஷெஸ்வான் தோசை' ரெடி!!

click me!