தினமும் '15' நிமிடங்கள் வாக்கிங்; இப்படி நடந்தா அத்தனை நன்மை இருக்கு!!
தினமும் 15 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வதால் கிடக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.
தினமும் 15 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வதால் கிடக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.
Why You Should Walk 15 Minutes a Day : நடைபயிற்சி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் மிதமான ஏரோபிக் பயிற்சியாகும். தினமும் 15 நிமிடங்கள் நடந்தால் உடலுக்கு 6 ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். பலர் எடை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நடக்கிறார்கள். இந்தப் பதிவில் நடைபயிற்சியால் உடலில் ஏற்படும் 5 வகையான நன்மைகளை காணலாம்.
சாப்பிட்ட பின்னர் 15 நிமிடங்கள் நடப்பது செரிமானத்தை தூண்டுகிறது. உங்களுடைய வயிறு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி நல்ல பயிற்சியாகும். சாப்பிட்ட உணவு உணவுக்குழல் வழியாக சீராக நகர்ந்து இரைப்பை, குடலுக்கு செல்ல நடைபயிற்சி உதவுகிறது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை தூண்ட குறுநடை உதவும். ஊட்டச்சத்துக்கள் நன்கு உறிஞ்சவும், மந்தமான செரிமானம் சரியாகவும் நடைபயிற்சி உதவும்.
நடைபயிற்சியால் மூளைக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டம் அதிகமாகும். கவனச்சிதறலை தடுக்க நடைபயிற்சி உதவுகிறது. நினைவாற்றல் கூர்மையாகும். மனத் தெளிவை தருகிறது. குறுநடைகள் அறிவாற்றலை மேம்படுத்த உதவும்.
நாள்தோறும் மூட்டுகளை உயவூட்ட தேவையான திரவமானது நடைப்பயிற்சி செய்யும்போது கிடைக்கிறது. இதனால் விறைப்பு பிரச்சனை சரியாகி மூட்டுகள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கின்றன. வயது முதிர்வால் ஏற்படும் மூட்டு பிரச்சனைகளை தடுக்க தினமும் நடைபயிற்சி செய்வது உதவுகிறது.
இதையும் படிங்க: நடக்கும்போது இந்த விஷயம் பண்றீங்களா? அப்ப நடக்குறதே வேஸ்ட்!!
நடக்கும்போது உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பு எரிக்கப்படும். அதிகமான வியர்வை வெளியேறும்போது சருமத்தில் காணப்படும் நச்சுக்கள் நீங்க உதவுகிறது. இதன் காரணமாக சருமம் பளபளப்பாக இருக்கிறது. நடக்கும்போது சரும செல்களுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதால் கொலாஜன் உற்பத்தி ஊக்குவிக்கப்படுறது.
இதையும் படிங்க: நடைபயிற்சி முடிந்ததும் '1' கிளாஸ் தண்ணீர் குடிக்கனுமா? இந்த காரணம் புதுசா இருக்கே!!
நடைபயிற்சி செய்வதால் நரம்பு மண்டலத்தில் நல்ல தாக்கம் உண்டாகிறது. இதனால் மன அழுத்த ஹார்மோன்கள் குறைந்து செரோடோனின் தொடர்புடைய நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் உற்பத்தி அதிகமாகிறது. இவை சீரான மனநிலையையும், நல்ல உணர்ச்சி நிலைத்தன்மையை ஏற்படுத்துவதால் மனச்சோர்வு நீங்கும். தொடர்ந்து நடக்கும்போது ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.