முகத்தில் உள்ள முடிகள் உதிர!! மஞ்சளுடன் இந்த பொருளை கலந்து ஃபேஸ் பேக் போடுங்க!
உங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்ற மஞ்சளுடன் நெய் கலந்து இப்படி பயன்படுத்துங்கள். சில நாட்களிலேயே முடி உதிர்ந்து முகம் பளபளக்கும்.
உங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்ற மஞ்சளுடன் நெய் கலந்து இப்படி பயன்படுத்துங்கள். சில நாட்களிலேயே முடி உதிர்ந்து முகம் பளபளக்கும்.
Ghee and Turmeric Face Mask to Remove Facial Hair : முகத்தில் முடி இருப்பது என்பது பல பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். அந்த முடி அவர்களின் முக அழகை கெடுக்கின்றன. இதனால் பலர் பார்லருக்கு சென்று முகத்தில் வளரும் தேவையற்ற முடியை அகற்ற அதிகம் செலவழிக்கிறார்கள். ஆனால் பார்லருக்கு செல்லாமலேயே வீட்டில் இருக்கும் மஞ்சள் மற்றும் நெய்யை வைத்து முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை சுலபமாக அகற்றி விடலாம்.
மஞ்சள் மற்றும் நெய் சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள். இவை இரண்டும் சமையலுக்கு மட்டுமின்றி, அழகுப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகிறது. இவை முகத்தை அழகாக்குவது மட்டுமல்லாமல், முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளையும் முற்றிலுமாக நீக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, இவை இரண்டும் உங்களதும் முகத்திற்கு முதல் அழகையும் கொடுக்கும். ஆயுர்வேதத்தின்படி, இவை இரண்டும் சரும பராமரிப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், மஞ்சளில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் நெய்யில் இருக்கும் பண்புகள் முகத்தை பிரகாசமாக வைக்க உதவுகின்றன.
இதையும் படிங்க: Facial Hair Removal: முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க வேண்டுமா? இந்த 5 வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!
மஞ்சளில் இருக்கும் பண்புகள் தூசி, அழுக்கு, மாசுபாடு மற்றும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குகின்றன. மஞ்சளுடன் நெய் கலந்து தடவினால் முகத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும். இது தவிர முகத்தை பிரகாசமாக்கும், முகத்தில் உள்ள நிறமிகள், கரும்புள்ளிகளை நீக்கும் மற்றும் சருமத்தின் நிறத்தை சிறப்பாகவும் சீரானதாகவும் காட்டும். அதுமட்டுமின்றி, முகத்தில் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் வருவதை தடுத்து, நீண்ட காலத்திற்கு இளமையாக காட்டும். மேலும் அவை வறண்ட சருமத்தை தடுத்து நீரற்றமாக வைக்க உதவும். இந்த ஃபேஸ் பேக் முகப்பரு பிரச்சனை வருவதையும், அதனால் வரும் வடுக்களையும் குறைக்கும்.
இதையும் படிங்க: முகத்தில் இருக்கும் முடியை நீக்க இனி பார்லர் போகாதீங்க.. இதோ ஈசியான 3 டிப்ஸ்!!
இதற்கு 1 ஸ்பூன் மஞ்சளுடன் மூன்று ஸ்பூன் நெய் கலந்து அதை உங்களது முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரத்திற்கு 2-3 முறை இந்த ஃபேஸ் பேக் போட்டு வந்தால் சில நாட்களிலேயே முகத்தில் இருக்கும் முடிகள் உதிர்ந்து விடும். உங்களது முகமும் பார்ப்பதற்கு அழகாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.