Whey Protein : முடி உதிர்தலுக்கு 'வே புரோட்டீன்' காரணமா? முழுத் தகவல்கள் இதோ!!
வே புரோட்டீன் (whey protein) உண்பது முடி உதிர்தலுக்கு இட்டு செல்லுமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வே புரோட்டீன் (whey protein) உண்பது முடி உதிர்தலுக்கு இட்டு செல்லுமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Link Between Whey Protein and Hair Loss : உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வே புரோட்டீன் (whey protein) குறித்து அறிமுகம் இருக்கும். வே புரோட்டீன் என்பது பாலைக் காய்ச்சி அதைத் திரிய விட்டு பனீர் தயாரித்த பின் அதில் மீதமாகும் தண்ணீர் தான். இந்தத் தண்ணீரை சில செயல்முறைகளுக்கு பின் பவுடாராக மாற்றுகிறார்கள். இதில் புரதச்சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துகள் இருக்கின்றன. ஆனால் இந்த வே புரோட்டீனை எடுத்து கொள்வதால் முடி உதிர்வதாக சொல்வது எந்தளவுக்கு உண்மை? என்பதை இங்கு காணலாம்.
- பொதுவாக உடலில் புரதச்சத்து பற்றாக்குறை இருந்தால் முடி உதிர்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை வே புரோட்டீன் சரி செய்யக்கூடும். சிலரின் புரதச்சத்து குறைபாட்டை வே புரோட்டீன் சரிசெய்து முடி உதிர்தலைக் கட்டுப்படுத்துகிறது. ஆகவே, வே புரோட்டீன் எடுத்துகொள்வதால் முடி உதிரும் என நேரடியாக கூறமுடியாது. எல்லோருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுவதும் இல்லை.
- சில ஆண்களுக்கு வே புரோட்டீன் எடுத்து கொள்வதால் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் அதிகரிக்கின்றன. இது முடி உதிர்தலுடன் தொடர்புடைய டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) ஹார்மோனாக மாறுவதால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. ஏற்கனவே மரபணுபடி வழுக்கை உள்ள நபர்களுக்கு முடி உதிர்தல் தீவிரமடையும்.
- பாலில் இருந்து பெறப்படும் வே புரோட்டீனை பொறுத்தவரை பக்கவிளைவு அதிகம் கிடையாது. ஆனால் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக எடுத்து கொண்டால் வாந்தி, குமட்டல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகள் வரும்.
- கட்டாயம் அனைவரும் வே புரோட்டீன் உண்ண வேண்டும் என்பதில்லை. நிபுணரின் பரிந்துரைபடி வே புரோட்டீன் எடுத்துக் கொள்ளலாம். பவுடராக எடுத்து கொள்ளாமல் வீட்டிலேயே பாலைத் திரியவிட்டு மிச்சமாகும் தண்ணீரை அருந்தலாம்.
இதையும் உண்ணலாம்?
வே புரோட்டீன் உண்ண விரும்பாதவர்கள் பருப்பு, பால், முட்டை, சிக்கன் போன்ற உணவுகளை சாப்பிடலாம்