வெயில்ல முகம் கருப்பாயிடுச்சா? இரவில் '1' ஸ்பூன் தயிர்ல இந்த பேஸ் பேக் போடுங்க!!

கோடைகாலத்தில் முகம் கறுத்துப் போனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகளில் ஒன்றை இரவு தூங்கும் முன் போடுங்கள். முகம் வெள்ளையாக மாறும்.

5 Best Homemade Face Packs for Tan Removal in tamil mks

Best Homemade Face Packs for Tan Removal : கோடை காலம் தொடங்கி விட்டதால், வெளியில் சென்றால் சுட்டேரிக்கும் வெயிலின் தாக்கம் நம்முடைய சருமத்தை மோசமாக பாதிக்கும்.  அதாவது சிறிது நேரம் விட்டு வெளியே சென்று வந்தால் கூட சருமத்தின் நிறம் மாறிவிடுகிறது. இன்னும் சொல்லப் போனால் கருமையாகிவிடும். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே இந்த பிரச்சினையை தவிர்க்க சருமத்தை முறையாக பராமரிப்பது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் சருமத்தின் நிறம் மாறி கருமையாக மாறிவிடும். பிறகு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது ரொம்பவே கடினம். 

5 Best Homemade Face Packs for Tan Removal in tamil mks

இத்தகைய சூழ்நிலையில், கொளுத்தும் வெயிலால் உங்களது முகம் கருமையாகி விட்டது என்று நீங்கள் நினைத்து கவலைப்படுகிறீர்கள் என்றால், சில நேச்சுரல் ஃபேஸ் பேக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் இரவு தூங்கும் முன் போட்டு வந்தால், வெயிலால் கறுத்துப் போன உங்களது முகம் வெள்ளையாக மாறிவிடும். அது என்னென்ன ஃபேஸ் பேக்குகள் என்பதை குறித்து இப்போது பார்க்கலாம்.


தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்:

ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் தயிர் ஒரு ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து, அந்த பேஸ்ட்டை உங்களது முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்தி பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்த மறக்காதீர்கள். மேலும் இந்த ஃபேஸ் பேக்கை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தினால் போதும். விரைவிலேயே நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

இதையும் படிங்க:  கருத்து இருக்கும் உங்கள் கழுத்து, கை, கால்களை வெறும் 5 நிமிடத்தில் வெள்ளையாக மாற்ற.. சிம்பிளான சூப்பர் டிப்ஸ்!

தக்காளி ஃபேஸ் பேக் :

இதக்கு ஒரு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை வெதுவெதுப்பான நீரில் நனைத்து நன்கு பிழிந்து அந்த துணியை உங்களது முகத்தில் சுமார் 5 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். பிறருக்கு ஒரு தக்காளியை கூலாக அரைத்து அதை உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த பேஸ்புக்கு வாரத்திற்கு ஒருமுறை மட்டும் போதும். சருமம் கருமையாகாது.

இதையும் படிங்க:  அடிக்குற வெயிலால உங்கள் கை, கால் கருப்பா ஆகிறதா..?  கவலைப்படாதீங்க 5 நிமிஷத்துல வெள்ளையாக மாற்றலாம்!

எலுமிச்சை மற்றும் சர்க்கரை பேஸ் பேக்:

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து அதை உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 10 நிமிடம் அப்படியே வைத்து விட்டு, பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்திய பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்த மறக்காதீர்கள். வாரதத்திற்கு 2 முறை இந்த பேஸ் பேக் பயன்படுத்தி வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.

பால் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் :

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் மஞ்சளுடன் சிறிதளவு பால் சேர்த்து அந்த பேஸ்ட்டை உங்களது முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி, 30 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தினால் போதும். அதுவும் இரவு தூங்கும் முன் தான் போட வேண்டும்.

கற்றாழை ஃபேஸ் பேக்:

இதற்கு ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் மஞ்சள் மற்றும் 2 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து அதை உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வரத்திற்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தினால் போதும்.

Latest Videos

vuukle one pixel image
click me!