சருமத்துக்கு எலுமிச்சை தோல்; இந்த ரகசியம் தெரிஞ்சா இனி தூக்கி எறியமாட்டீங்க!
எலுமிச்சை தோலின் 5 சரும பராமரிப்பு நன்மைகளை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
எலுமிச்சை தோலின் 5 சரும பராமரிப்பு நன்மைகளை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Benefits Of Lemon Peel For Skincare : எலுமிச்சை சரும பராமரிப்பிற்கு ஒரு வரப் பிரசாதம் என்பதை நாம் அனைவரும் ஏற்கனவே அறிந்ததே. அதுமட்டுமின்றி அதன் தோலும் சரும பராமரிப்பிற்கு மிகவும் நல்ல பயக்கும் தெரியுமா? ஆம், வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனைகள் நிறைந்த எலுமிச்சை தோல்கள் சருமத்தை பிரகாசமாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. எலுமிச்சை தோல் உங்களது சரும பராமரிப்பு புதிய மாற்றத்தை கொடுக்கும். எலுமிச்சை தோலில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை சரும பராமரிப்பிற்கு மிகவும் நன்மை பயக்கும். அது என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எலுமிச்சை தோலானது சருமத்திற்கு மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டாகச் செயல்படுகிறது. இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, சருமத்தை மிகவும் மென்மையாகவும் பொலிவாகவும் மாற்ற உதவுகிறது.
இதையும் படிங்க: இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி எலுமிச்சை தோலை தூக்கி போட மாட்டீங்க!!
வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை தோல் முகத்தில் படிந்திருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை நீக்க உதவுகிறது. இதன் விளைவாக சருமத்தின் நிறம் மேலும் சீராகவும், பொலிவாகவும் மாறும்.
இதையும் படிங்க: எலுமிச்சை தோலை தூக்கி போடாதீங்க! 'இப்படி' யூஸ் பண்ணா லெமனை மிஞ்சும் பலன்கள்!!
எலுமிச்சை தோலில் இருக்கும் அஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் சரும உற்பத்தியை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால் முகத்தில் வடியும் எண்ணெயை கட்டுப்படுட்டு, முகப்பருக்கள் வருவது தடுக்கப்படும். மேலும் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் மற்றும் முகத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.
எலுமிச்சை தோலில் இருக்கும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும். இதனால் முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் குறித்து முகத்தை தெளிவாக்க ஊக்குவிக்கிறது.
எலுமிச்சை தோலில் இருக்கும் ஆக்சிஜனேற்றுகள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி, மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகள் ஏற்படுவதை குறைக்க உதவுகின்றது. மேலும் இது சருமத்தை எப்போதும் இளமையாக வைக்க உதவும்.