Published : Mar 27, 2025, 07:27 PM ISTUpdated : Mar 27, 2025, 07:28 PM IST
துளசி ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். பளபளப்பான முகத்தைப் பெற துளசி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
How To Use Tulsi For Face : துளசி என்பது கிட்டத்தட்ட எல்லாருடைய வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும் ஒரு செடியாகும். இந்து மதத்தில் துளசிக்கு சிறப்பு இடம் உண்டு. மத முக்கியத்துவத்தை தவிர, துளசியில் பல மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. இதன் காரணமாக இது ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். துளசியில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள், அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக சருமத்திற்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
25
முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் வறண்ட சருமம் போன்ற பல சரும பிரச்சனைகளை குணமாக துளசி இலை உதவுகிறது. சரி, இப்போது துளசி இலையை எப்படி முகத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
35
துளசி டோனர்:
இதற்கு செடியில் இருந்து தேவையான அளவு துளசிகளை பறித்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்ததும் அதில் துளசி இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி ஆற வைக்கவும். பின் அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நீங்கள் மேக்கப் போடுவதற்கு முன் மற்றும் அகற்றுவதற்கு முன் அதை உங்களது முகம் மற்றும் கழுத்தில் தெளிக்கலாம்.
இதற்கு ஒரு கிண்ணத்தில் துளசி பொடியை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு செய்வது நன்றாக கலந்து பிறகு உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்த மறக்காதீர்கள்.
தயிரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே தயிருடன் துளசியும் சேர்ந்து ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தினால் பல சரும பிரச்சனைகள் நீங்கும். இப்போது ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் துளசி பொடி மற்றும் சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக கலந்து அதை உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்போது பார்த்தால் உங்களது முகம் பிரகாசமாக இருக்கும்.