துளசி செடிக்கு இவ்வளவு பவரா? அள்ள அள்ள குறையாத பணம்..
Tulsi Vastu Tips : வாஸ்து சாஸ்திரத்தின் படி, செல்வம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை பெற துளசி செடியை வீட்டில் எங்கு வைக்க வேண்டும் என்று இங்கு காணலாம்.

துளசி செடிக்கு இவ்வளவு பவரா? அள்ள அள்ள குறையாத பணம்..
துளசி செடி இந்து மதத்தில் புனிதமாக கருதப்படுகிறது. இதனால்தான் துளசி செடி கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் காணப்படுகின்றது. மேலும் காலையில் மாலையிலும் துளசி செடி அருகே விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். துளசி செடி பச்சையாக இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும், அத்தைக்கு வீட்டில் லட்சுமி தேவி வசிப்பாள் என்றும் நம்பப்படுகின்றது. துளசி செடியை சரியான திசையிலும், சரியான இடத்தையும் வைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிப்பது மட்டுமில்லாமல், பணத்தட்டுப்பாடு வரவே வராது. மேலும் வீட்டில் எப்போதுமே மகிழ்ச்சியும், செழிப்பும் நிலவும். இத்தகைய சூழலையில், செல்வம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை பெற வாஸ்து சாஸ்திரத்தின் படி துளசி செடியை எந்த திசையில் மற்றும் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
துளசி செடி இந்த திசையில் வைக்கவும்:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, துளசி செடியை வீட்டின் முற்றத்தில், மையத்தில், அல்லது வடக்கு அல்லது, வடகிழக்கு திசையில் நடலாம். பால்கனையில் அல்லது ஜன்னலில் துளசி செடியை வைக்க விரும்பினால் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்கலாம்.
துளசி செடியை இந்த திசையில் வைக்காதே!
வாஸ்து சாஸ்திரத்தின் படி, துளசி செடியை தெற்கு திசையில் நடக்கூடாது. இந்த திசையில் வைப்பது மூலம் முன்னோர்கள் உங்கள் மீது கோபப்படும். மேலும் தெற்கு திசை எமனின் திசையாக இருப்பதால் இந்த திசையில் வைத்தால் லட்சுமி தேவியும் கோபப்படுவாள். இதனால் உங்களது வாழ்க்கையில் வறுமை மேலோங்கக்கூடும். எனவே புனிதமாக கருதப்படும் துளசி செய்தியை இந்த திசையில் ஒருபோதும் வைக்க வேண்டாம்.
இதையும் படிங்க: Tulsi Astrology remedy: தீராத கடன் தீர, பணம் சேர, சக்தி வாய்ந்த பரிகாரம்: உடனே செய்யவும்!!
சுத்தமாக வை:
ஒரு வீட்டில் துளசி இருந்தால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, அமைதி கிடைக்கும். மேலும் இது புனிதமாக கருதப்படுவதால் அந்த இடம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். குப்பை போன்ற அசுத்தமான பொருட்கள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: வீட்டில் துளசி செடி வைத்திருந்தால் 'இந்த' தவறை மட்டும் செய்யாதீங்க.. தீராத கஷ்டமும் வறுமையும் வரும்!
துளசி செடி வைக்கும் முறை:
துளசி செடி தரையில் நடுவது அசம்பமாக கருதப்படுகிறது. எனவே நல்ல பலன்களை கிடைக்க அதை ஒரு தொட்டியில் நடலாம். அதுபோல துளசி செடிக்கு அருகில் கற்றாழை போன்ற முள் செடிகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். சமையலறைக்கு வெளியே துளசி செடி வைத்தால் திருமண வாழ்க்கை இனிமையாக நிலைத்திருக்கும். முக்கியமாக துளசி செடிக்கு போதுமான சூரிய ஒளி கிடைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
துளசி செடி பராமரிப்பு :
துளசி செடி வீட்டில் வைத்தால் அதை கவனமாக வளர்க்க வேண்டும். அதை சேதப்படுத்தவோ அல்லது அதன் இலையை பட்டுப்போக விடக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி துளசி செடியை முறையாக பராமரிக்க விட்டால் வீட்டில் உள்ளவர்களுக்கு துரதிஷ்டத்தை தரும்