கோடையில் சருமம் வறட்சியை தடுக்கும் உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்!!
கோடைகாலத்தில் உங்கள் சருமம் வறண்டு போனால் உருளைக்கிழங்கு வைத்து இந்த ஃபேஸ் பேக் போடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
கோடைகாலத்தில் உங்கள் சருமம் வறண்டு போனால் உருளைக்கிழங்கு வைத்து இந்த ஃபேஸ் பேக் போடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
How to Use Potato Face Pack for Summer Skin Relief : கோடையில் வெப்ப காற்று சருமத்தின் நிறத்தை மாற்றி விடுகிறது. இந்த சீசனில் சருமம் வறண்டு போவது மட்டுமின்றி உயிரற்றதாகி சருமத்தில் தடிப்புகள் உருவாகத் தொடங்கும். கோடை காலத்தில் சரும வளர்ச்சியை போக்க கிரீம்கள் பயன்படுத்தினாலும் சருமம் கருமையாக மாறிவிடும். கோடைகாலத்தில் கடுமையான வெயிலால் முகத்தில் எரிச்சலை ஏற்படுகிறது. மேலும் வறட்சியும் அதிகரிக்கிறது. எனவே இந்த சீசனில் உருளைக்கிழங்கு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம், இது சரும வறட்சியை போக்குவதிலும், சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த கோடைகாலத்தில் உங்களது சருமத்தை ஈரப்பதமாக வைக்க விரும்பினால் உருளைக்கிழங்கு வைத்து ஃபேஸ் பேக் போடுங்கள். உருளைக்கிழங்கு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உருளைக்கிழங்கில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை கோடையில் உங்களது சருமத்தை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் வைக்க உதவுகிறது. மேலும் உருளைக்கிழங்கில் இருக்கும் இந்த பண்புகள் சருமத்தை பளபளப்பாக வைக்கும். சரி இப்போது கோடையால் சருமம் வறண்டு போனால் உருளைக்கிழங்கு வைத்து இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள். உங்களது முகம் பளபளக்கும்.
இதையும் படிங்க: வெயில்ல முகம் கருக்குதா? இந்த மாதிரி கடலை மாவு பேஸ் பேக் போடுங்க!!
உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக் செய்ய முதலில் உருளைக்கிழங்கை தோல் உரித்து, மிக்ஸியில் அரைத்து அதனுடன் சிறிதளவு பச்சைபால் சேர்த்து நன்கு கலந்து அந்த பேஸ்ட்டை உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். பிறகு குளிர்ந்து நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கில் வாரத்திற்கு 2 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனால் உங்களது முகம் பளபளப்பாகவும், அழகாகவும் இருக்கும்.
இதையும் படிங்க: ஆண்களே! வெயில் காலத்தில் முகம் பளபளக்க இதை செய்ங்க!
கோடையில் சூரிய வெப்பத்தால் சருமம் கருத்து போகும். எனவே உருளைக்கிழங்கு பேஸ் பேக் உங்களுக்கு உதவும். இது சருமத்தில் இருக்கும் நிறத்தை மாற்றும். இதற்கு உருளைக்கிழங்கு சாற்றுடன் 2 ஸ்பூன் தேன் கலந்து அதை உங்களது முகத்தில் ஃபேஸ் பேக்காக போட வேண்டும். சுமார் 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை ஈரப்பதமாக வைக்கும்.