முகத்தில் இருக்கும் முடியை நீக்க இனி பார்லர் போகாதீங்க.. இதோ ஈசியான 3 டிப்ஸ்!!
முகத்தில் இருக்கும் முடியை எந்த பாதிப்பும் இல்லாமல் நீக்க உதவும் மூன்று எளிய தீர்வுகள் இங்கே...

பொதுவாகவே, பெண்கள் தங்கள் அழகில் அதிக கவனம் செலுத்துவார்கள். அந்த வகையில், பெண்கள் தங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடியை நீக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள். இதற்காக அவர்கள் சந்தையில் கிடைக்கும் பல வகையான பொருட்களையும் பயன்படுத்திகிறார்கள்.
இருப்பினும், அத்தகைய தயாரிப்புகளில் இருக்கும் ரசாயனங்கள் முகத்தின் மென்மையான தோலை சேதப்படுத்தும். எனவே, இயற்கை முறையில் முகத்தில் இருக்கும் முடியை எப்படி அகற்றலாம் என்பதை குறித்து தெரிந்துகொள்ளலாம்.
தேன் மற்றும் சர்க்கரை: ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் சர்க்கரை, 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் தண்ணீர் ஆகியவற்றை 30 விநாடிகளில் அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். முழுவதுமாக உருகியதும், அதை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து அதை அகற்றவும்.
இதையும் படிங்க: முகத்தில் எண்ணெய் வழிகிறதா...? இனிமே ஃபேஸ் வாஷ் வெளியில் வாங்காமல் வீட்டிலயே தயாரிச்சு யூஸ் பண்ணுங்க!
பப்பாளி மற்றும் வாழைப்பழம்: 2 ஸ்பூன் பப்பாளி கூழ், அரை ஸ்பூன் மஞ்சள் மற்றும் 3 ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அவற்றை நன்கு கலந்து, பிறகு முகத்தில் தடவவும். நன்கு காய்ந்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இதையும் படிங்க: PCODயால் முகப்பரு வருதா..? அப்ப இந்த 3 பொருட்களை இளநீரில் கலந்து குடிங்க!
வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ்: ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் பழுத்த வாழைப்பழத்தை எடுத்து இரண்டையும் நன்றாக பிசைந்து அதை முகத்தில் தடவுங்கள். சிறிது காய்ந்தது முகத்தை 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் அப்படியே விட்டுவிடுங்கள். சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D