கர்ப்பிணிகள் லெகின்ஸ் போடாதீங்க!! இந்த பிரச்சனையோட அதிர்ச்சி பின்னணி தெரியுமா?
கர்ப்பிணி பெண்கள் லெகின்ஸ் அணிவதால் ஏற்படும் சில உடல் ரீதியான பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கர்ப்பிணி பெண்கள் லெகின்ஸ் அணிவதால் ஏற்படும் சில உடல் ரீதியான பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Risks of Wearing Leggings During Pregnancy : லெகின்ஸ் என்பது இன்றைய காலத்தில் இளம் பெண்கள் அணிய விரும்பும் உடைகளில் ஒன்றாகும். ஆனால் கர்ப்பிணி பெண்கள் லெகின்ஸ் அணியக்கூடாது என்று நிபுணர்கள். கர்ப்ப காலத்தில் லெகின்ஸ் அணிந்தால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அது என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
லெகின்ஸ் உடம்போடு ஒட்டியிருப்பதால், கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களை கட்டுப்படுத்தி, அசெளகரிகமாக உணர வைக்கும். முக்கியமாக இது வயிறு மற்றும் முதுகில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் இடுப்பு வலி கீழ் முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்:
லெகின்ஸ் இருக்குமாக இருப்பதால் அது இடுப்பு பகுதியை சுருக்கி சுவாசத்தை தடுக்கிறது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை வருவது பொதுவானது. இத்தகைய சூழ்நிலையில் கர்ப்பிணி பெண்கள் லெகின்ஸ் போன்ற இருக்குமான ஆடைகளை அணிந்தால் மலச்சிக்கல் பிரச்சனை இன்னும் மோசமாகும். இதனால் இரைப்பை குடல் பிரச்சனை மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்படும்.
சுருள் சிறை நாளங்கள் பிரச்சனை:
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ரத்தத்தின் அளவு அதிகரிக்கும் மற்றும் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும். இதன் காரணமாக சுருள் சிரை நாளங்கள் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில், லெகின்ஸ் கால்களில் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தி இந்த பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
இதையும் படிங்க: கர்ப்பிணிகள் முதல்ல தெரிஞ்சுக்க வேண்டிய உண்மை.. வெண்டைக்காயை ஒதுக்கமாட்டீங்க!!
லெகின்ஸ் இறுக்கமாக இருப்பதால் அதை அணியும் போது சரியான காற்றோட்டம் இல்லாமல் இருக்கும். இதனால் உடலில் வெப்பம் அதிகரிக்கும். இதுவும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் இந்த பிரச்சினை மேலும் அதிகரிக்கும்.
சரும எரிச்சல் மற்றும் வீக்கம்:
லெகின்ஸ் அதிகப்படியான வியர்வையை தோற்றுவித்து காற்றோட்டத்தை தடுக்கும். இதனால் சருமத்தில் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படும்.
இதையும் படிங்க: கர்ப்பிணிகள் மருதாணி வைத்தால் கெட்டது நடக்குமா? சாஸ்திரம் சொல்வது இதுதான்!!
கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் சில சமயங்களில் உடலில் அரிப்பை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், லெகின்ஸ் போன்ற இறக்கமான ஆடைகளை அணிந்தால் உடலில் அரிப்பு பிரச்சனையை மேலும் அதிகரிக்கச் செய்யும். அதுவும் குறிப்பாக மார்பகங்கள் மற்றும் வயிற்றுப் பகுதியில் இன்னும் அதிகமாகும்.
சருமத்தில் அலர்ஜி:
லெகின்ஸில் இருக்கும் சாயங்கள் மற்றும் செயற்கை பொருட்கள் சில சமயங்களில் சருமத்தில் தடிப்புகள், சிவத்தல் போன்ற அலர்ஜியை ஏற்படுத்தும்.