MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • கர்ப்பிணிகள் மருதாணி வைத்தால் கெட்டது நடக்குமா? சாஸ்திரம் சொல்வது இதுதான்!!

கர்ப்பிணிகள் மருதாணி வைத்தால் கெட்டது நடக்குமா? சாஸ்திரம் சொல்வது இதுதான்!!

Mehndi During Pregnancy : கர்ப்பிணிகள் கைக்கு மருதாணி வைக்கலாமா? அதனால் ஏதேனும் கெட்டது நடக்குமா? இது குறித்து சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jan 21 2025, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mehndi During Pregnancy in Tamil

Mehndi During Pregnancy in Tamil

கைகளில் மருதாணி வைப்பது பல நூற்றாண்டுகளாகவே உள்ளது. இது திருமணத்தில் முதன்மையாக கருதப்படுவது மட்டுமில்லாமல் மகிழ்ச்சி, கொண்டாட்டம் மற்றும் நேர்மறை ஆற்றலின் அடையாளமாகவும் இருக்கிறது. பண்டிகைகள் மற்றும் பல திருமண சடங்குகளின் போது பெண்கள் தங்கள் கைகளை மருதாணி வைத்து அழகு படுத்துகிறார்கள். ஆனால் எல்லாருடைய மனதிலும் எழும்பும் ஒரு கேள்வி என்னவென்றால், கர்ப்ப காலத்தில் கைகளில் மருதாணி வைக்கலாமா.. கூடாதா என்பது தான். ஏனெனில் இது சமயத்தில் கர்ப்பிணி பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதால் அவர்கள் பல விஷயங்களை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஜோதிட சாஸ்திரத்திலும் கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாத பல விஷயங்கள் உள்ளன. எனவே இப்போது இந்த பதிவில் ஜோதிட சாஸ்திரத்தின் படி கர்ப்பிணி பெண்கள் கைகளில் மருதாணி வைக்கலாமா.. கூடாதா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

25
Mehndi During Pregnancy in Tamil

Mehndi During Pregnancy in Tamil

மருதாணியும் ஜோதிடமும்:

ஜோதிட சாஸ்திரத்தின் படி, மருதாணி என்பது வீனஸ் கிரகத்துடன் தொடர்புடையது. இது அழகு, மகிழ்ச்சி, அன்பு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை குறிக்கிறது. பெண்கள் மருதாணியை கையில் வைப்பதால் வீனஸ் கிரகத்தின் ஆற்றல் அதிகரிக்கும். மேலும் நல்லிணக்கம் செழிப்பு வரும். இதனால் தான் பெண்கள் தங்களது கைகளில் மருதாணி வைப்பது நல்லது என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அதுமட்டுமின்றி வீனஸ் கிரகம் அழகை பிரதிபடுத்துவதால் பெண்கள் கைகளில் மருதாணி வைப்பது அவர்களுக்கு அழகை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி மருதாணி உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். எனவே பெண்கள் கைகளில் மருதாணி வைப்பது நல்லது.

இதையும் படிங்க:  கர்ப்பகாலத்தில் 'கால்' வீங்குதா? 'இப்படி' ஃபாலோ பண்ணா உடனே குறையும்!!

35
Mehndi During Pregnancy in Tamil

Mehndi During Pregnancy in Tamil

கர்ப்ப காலத்தில் மருதாணி வைக்கலாமா?

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கர்ப்பிணி பெண்கள் கைகளில் மருதாணி வைக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் இந்த சமயத்தில்தான் எந்த கிரகங்களின் தாக்கங்கள் அதிகரிக்கும். அதுவும் குறிப்பாக மருதாணி வீனஸ் கிரகத்துடன் தொடர்புடையது என்பதால், பெண்ணின் ஜாதகத்தில் வீனஸ் பலவீனமாக இருந்தால் அந்தப் பெண் மருதாணி வைப்பது நேர்மை ஆற்றலுக்கு பதிலாக, எதிர்மறை ஆற்றலை இருக்கும். கூடுதலாக, இது அவரது உணர்ச்சி மற்றும் மனநிலையை மோசமாக பாதிக்கும் இதனால் தேவையற்ற மன அழுத்தம் தான் ஏற்படும். மேலும் கர்ப்ப காலத்தில் பெண்ணின் ஜாதகத்தில் சனி, ராகு அல்லது கேது வலுவாக இருந்தால், அந்தப் பெண் மருதாணி வைத்தால் கவலை மற்றும் பிரச்சனை ஏற்படும். எனவே இத்தகைய சூழ்நிலையில் அசுப கிரகங்களின் தாக்கங்கள் அதிகரிப்பதை தவிர்க்க கர்ப்பிணி பெண்கள் மருதாணி வைப்பதைத் தவிர்க்க வேண்டுமென்று ஜோதிடர்கள் சொல்லுகின்றனர்.

45
Mehndi During Pregnancy in Tamil

Mehndi During Pregnancy in Tamil

கர்ப்ப காலத்தில் எப்போது மருதாணி வைக்கலாம்?

ஜோதிட சாஸ்திரங்களின்படி, கர்ப்ப காலத்தில் உங்களுக்கு வேறு எந்த உடல் பிரச்சனையும் இல்லை என்றாலோ அல்லது உங்களது கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் நன்றாக இருந்தாலோ நீங்கள் கைகளில் மருதாணி வைக்கலாம்.

இதையும் படிங்க:  மீன் எல்லோருக்கும் நல்லதல்ல.. இந்த '7' மீன்களை 'கர்ப்பிணிகள்' சாப்பிடக் கூடாது!! 

55
Mehndi During Pregnancy in Tamil

Mehndi During Pregnancy in Tamil

கர்ப்ப காலத்தில் கைகளில் மருதாணி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் அதிக வெப்பம் சுரப்பதால் சோர்வு, அமைதியின்மை, எரிச்சல் போன்ற உணர்வுகள் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில் மருதாணி இலைகள் குளிர்ச்சியானது என்பதால் இது உடலை தளர்த்தும் மற்றும் வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். மருதாணி உடல் சூட்டை தணிப்பது மட்டுமில்லாமல் சருமத்திற்கு குளிர்ச்சியை தருவதோடு அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. இருப்பினும் மருதாணியில் இருக்கும் குளிர்ச்சியான விளைவு சில பெண்களுக்கு அதிகப்படியான குளிர்ச்சியை ஏற்படுத்தி விடும் . இதனால் சளி, காய்ச்சல் இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவே அதை பயன்படுத்துவதற்கு முன் உங்களது உடலில் நிலையை புரிந்து கொண்டு மருத்துவர் அணுகிய பின்னரே பயன்படுத்தவும்.

முக்கிய குறிப்பு : கர்ப்ப காலத்தில் செயற்கை மற்றும் ரசாயனம் கலந்த மருதாணியில் இருந்து விலகி இருங்கள். ஏனெனில் அவற்றில் இருக்கும் சில ரசாயனங்கள் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். இது கர்ப்ப காலத்தில் மோசமான தீங்கு விளைவிக்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாஸ்து தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில் – கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் கோயில்!
Recommended image2
பக்திக் கடலில் நனைந்த அறுபடை வீடுகள்! விண்ணதிரும் ‘அரோகரா’ முழக்கத்துடன் கோலாகலமாக நடந்த தைப்பூசம் 2026!
Recommended image3
கஷ்டங்களை நீக்கும் ஆகாசபுரீஸ்வரர் கோயில்! பூராடம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய பரிகாரத் தலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved