அடிக்குற வெயிலுக்கு தயிர் சூப்பர் உணவு!! ஆனா தினமும் சாப்பிட்டா நல்லதா?
கோடை காலத்தில் தயிர் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும் தான். ஆனால் அதை தினமும் சாப்பிடக் கூடாது. அது ஏன் என்பதற்கான காரணம் இங்கே.
கோடை காலத்தில் தயிர் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும் தான். ஆனால் அதை தினமும் சாப்பிடக் கூடாது. அது ஏன் என்பதற்கான காரணம் இங்கே.
Why Curd Should Not Be Consumed Daily During Summer : தயிர் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நாம் அனைவரும் அறிந்ததே. இதில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் கோடை காலத்தில் தினமும் தவிர் சாப்பிடக்கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கான காரணம் என்ன தெரியுமா? அது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கோடைகாலத்தில் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக தயிர் வயிற்றை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின் பி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் தயிரில் உள்ளன. ஆனால், கோடையில் சிலருக்கு தயிர் சாப்பிட்டால் சரும பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள், முகப்பருக்கள், உடல் சூடு போன்றவை ஏற்படுவதாக புகார் கூறுகின்றனர். அதற்கான காரணம் என்ன தெரியுமா?
கோடையில் கொளுத்தும் வெயிலிலிருந்து தப்பிக்க நம்மில் பலர் தினமும் தயிர் சாப்பிடுகிறோம். ஏனெனில் தயிர் உடலை குளிர்ச்சியாக வைக்கும் என்று நம்புகிறோம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. ஏனெனில் அதில் உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை அதிகமாக உள்ளதாக நிபுணர்கள் சொல்லுகின்றன. இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ஆம், கோடையில் தயிர் சாப்பிடுவது நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகளை கொண்டுள்ளது என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இது வாத, பித்த, கபம் ஆகியவற்றைப் பொறுத்து நபருக்கு நபர் மாறுபடும் என்று கூறுகின்றனர்.
தயிரில் இருக்கும் குளிர்ச்சித் தன்மை உடலை குளிர்ச்சியாக வைக்கும் என்று. நாம் எண்ணி, தான் கோடையில் தினமும் தயிர் சாப்பிடுகிறோம். ஆனால், உண்மையில் தயிரில் இருக்கும் புளிப்பு சுவை உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதுகுறித்து நாம் அறிந்திருக்கவே மாட்டோம். மேலும் இதனால்தான் தயிர் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கின்றது என்று ஆயுர்வேதம் சொல்லுகின்றது.
இதையும் படிங்க: பொடுகை விரட்டும் எளிய வழி.. தயிர் வைத்து தலையை 'இப்படி' சுத்தம் பண்ணுங்க!!
தயிரில் வாதம் குறைவாகவும், பித்தம் கபம் அதிகமாகவும் இருப்பதால் கோடை காலத்தில் தயிர் சாப்பிடும் போது உடல் சூடு ஆவதற்கு இதுதான் காரணம். அதுமட்டுமின்றி தயிர் உடலை குளிர்ச்சியாகக்கும் என்று நினைத்து சிலர் அதிகமாகவே சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக தான் அவர்களுக்கு பருக்கள் மற்றும் பிற பிரச்சனைகளும் வருகின்றது.
இதையும் படிங்க: வறண்ட சருமம்? தயிரை இப்படி யூஸ் பண்ணுங்க முகம் பட்டு போல மென்மையாகும்!
கோடையில் நீங்கள் தினமும் தயிர் சாப்பிடுவதற்கு பதிலாக அதை மோராக குடிக்கலாம் .இதனால் எந்த வித பிரச்சனையும் ஏற்படாது. முக்கியமாக மோருடன் சிறிதளவு மிளகு, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து குடித்தால் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. கோடையில் மோர் ஏன் குடிக்க வேண்டும் என்றால் தயிரில் தண்ணீர் கலக்கும் போது அதில் இருக்கும் வெப்பத்தின் தன்மை குறைந்து, குளிர்ச்சியை அதிகரிக்கிறது. எனவே நீங்கள் கோடையில் தினமும் கூட மோர் சாப்பிட்டால் எந்தவித பிரச்சனையும் இல்லை. அது உங்களது உடலை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் வைக்கும்.
தயிருடன் வேறு எந்த பழங்களையும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று ஆயுர்வேதம் சொல்லுகின்றது. அதுபோல, தயிரை ஒருபோதும் சூடாக்கவே கூடாது. மேலும் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் தயிரை சாப்பிட வேண்டாம்.