நடைபயிற்சி முடிந்ததும் '1' கிளாஸ் தண்ணீர் குடிக்கனுமா? இந்த காரணம் புதுசா இருக்கே!!
நடைபயிற்சியை முடித்த பின்னர் ஏன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
நடைபயிற்சியை முடித்த பின்னர் ஏன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
Should You Drink a Glass of Water After Walking? : நடைபயிற்சி செய்யும் போது உடலில் இருந்து ஆற்றல் எடுத்துக் கொள்ளப்படுகிறது. உடல் இயக்கத்திற்கு ஏற்றவாறு வியர்வையும் வெளியேறுகிறது. இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து இழக்கப்படுகிறது. இதை ஈடுகட்ட நடைபயிற்சியை முடித்த பின்னர் தண்ணீர் குடிக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வியர்வையால் வெளியேறிய நீர்ச்சத்தை ஈடுகட்ட, நீரேற்றத்தை ஆதரிக்க போதுமான அளவில் தண்ணீர் குடிக்கவேண்டும்.
உடலில் உள்ள தசை செயல்பாடு, ஆற்றல் நிலைகள், ஒட்டுமொத்த மீட்பு ஆகியவற்றுக்கு போதுமான நீரேற்றம் அவசியமானது. இதை சரி செய்ய நடந்து முடித்த பின்னர் வசதியாக அமர்ந்தபடி தண்ணீர் குடிக்க வேண்டும். போதுமான அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால் தலை வலி, மயக்கம், சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
இதையும் படிங்க: நடக்கும்போது இந்த விஷயம் பண்றீங்களா? அப்ப நடக்குறதே வேஸ்ட்!!
நடைபயிற்சி செய்த பிறகு தண்ணீர் குடித்தால் உடலுக்கு மீண்டும் நீர்ச்சத்து கிடைக்கும். அதற்காக லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை. வியர்வை மூலம் இழந்த நீர்ச்சத்தை பதிலீடு செய்ய போதுமான தண்ணீரைக் குடித்தால் போதும். காலை எழுந்ததும் தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்க சிறந்த வழியாகும். வாக்கிங் சென்று திருன்பிய பின்னர் 450 மிலி முதல் 500 மிலி வரை தண்ணீர் குடிக்கலாம்.
இதையும் படிங்க: காலைல தண்ணீர் குடிக்கலாம்.. ஆனா வாக்கிங் போறப்ப தண்ணீர் குடிக்கலாமா?
- நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வந்த பின்னர் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கலாம் என நினைக்காமல் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்தால் மூளை அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். நடைபயிற்சி செய்யும்போது தொண்டையை நனைக்கும் அளவுக்கு தண்ணீர் குடித்தால் போதும்.
- நடந்து முடித்த பின்னர் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்துங்கள். தற்போது கோடைகாலம் என்பதால் கண்டிப்பாக உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். அதில் அலட்சியம் காட்டக்கூடாது. அதனால் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.