கோடை வெயிலுக்கு இளநீர் நல்லது: ஆனா எப்போது குடிக்க வேண்டும் தெரியுமா?
கோடைகாலத்தில் இளநீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. ஆனால் எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் தெரியுமா?
கோடைகாலத்தில் இளநீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. ஆனால் எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் தெரியுமா?
Best Time to Drink Coconut Water During Summer : கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைப்பது மிகவும் அவசியம். இதற்கு பல பானங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இளநீர். ஆம், கோடைகாலத்தில் இளநீர் குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் இதில் அமினோ அமிலங்கள், பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு போன்றவை உள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட், கலோரிகள் மற்றும் சர்க்கரை குறைவாகவே உள்ளன. கோடை காலத்தில் இளநீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைப்பதுடன், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
இதனால்தான் கோடைகாலத்தில் இளநீரை எந்த நேரத்திலும் குடித்தாலும் அதன் முழு பலனை பெறலாம் என்ற எண்ணங்கள் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. கோடை காலத்தில் இளநீர் குடிப்பதற்கு சரியான நேரம் காலை தான். ஆம், கோடைகாலத்தில் காலை வேளையில் இளநீர் குடித்து நாளை தொடங்கினால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம். மேலும் உடலை புத்துணர்ச்சியாக வைக்க உதவும். சரி, கோடை காலத்தில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இளநீரில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நம் உடலுக்கு மிகவும் அவசியம். மேலும் இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கோடைகாலத்தில் வரும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது.
உடலை நீரேற்றமாக வைக்கும் : கோடை காலத்தில் நீரேற்றமாக வைக்க தினமும் இளநீர் குடியுங்கள்.
எடையை கட்டுக்குள் வைக்கும் : இளநீரில் கலோரிகள் சர்க்கரை குறைவாக உள்ளதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க இது பெரிதும் உதவுகிறது.
இதையும் படிங்க: இளநீரை அளவுக்கு அதிகமாக குடிச்சா ஆபத்தா? உண்மை என்ன?
கோடைகாலத்தில் சூரிய வெப்பம் மற்றும் தூசி, மாசு ஆகியவற்றால் சருமம் பொலிவிழிந்து காணப்படும். இத்தகைய சூழ்நிலையில், தினமும் இளநீர் குடித்து வந்தால் அதில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜன் ஏற்றிகள் இந்தக் கோடை காலத்திலும் உங்களது சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்கும்.
உடல் சோர்வை போக்கும் : கோடை வெப்பத்தால் உடல் சீக்கிரமாகவே சோர்வடைந்து விடும். இதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு தான். ஆனால் இளநீர் குடிப்பதன் மூலம் நீங்கள் புத்துணர்ச்சியாக உணரலாம்.
இதையும் படிங்க: யாரெல்லாம் இளநீர் குடிக்கவே கூடாது? குடித்தால் என்ன ஆகும்?
- ஆம், கர்ப்பிணிகள் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க இளநீர் குடிக்கலாம். மேலும் இது நெஞ்செரிச்சல் மற்றும் காலையில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும்.
- அதுபோல நீங்கள் உடற்பயிற்சி செய்த பிறகு இளநீர் குடித்தால் உடல் நீரேற்றத்துடன் இருக்கும்.
குறிப்பு : சர்க்கரை நோயாளிகள், உயரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பிறகு இளநீர் குடிக்க வேண்டும்.