முலாம்பழம் பத்தி தெரியுமா? வெயில் நேரத்துல கண்டிப்பா சாப்பிடனும்!!

கோடைகாலத்தில் முலாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

health benefits of eating muskmelon during summer in tamil mks

Muskmelon Health Benefits - Why It's A Must Have In Your Summer Diet : ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு பழம் பேமஸ். சீசனில் வரும் பிரச்சனைகளை சுலபமாக எதிர்கொள்ளக்கூடிய மருத்துவப் பண்புகளை கொண்டிருப்பதால் சீசனில் வரும் பழங்களை சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் மாம்பழம், தர்பூசணி மற்றும் முலாம்பழம் ஆகியவை கோடைகால பழங்களாகும். இவற்றில் மாம்பழம் மற்றும் தர்பூசணியின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். முலாம் பழத்தின் நன்மைகளைப் பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

health benefits of eating muskmelon during summer in tamil mks

முலாம்பழம் கோடைகால பழங்களில் ஒன்றாகும். இது கிரினி பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இந்த பழத்தில் தர்பூசணி போலவே நீர்ச்சத்து அதிகம் உள்ளன. இது தவிர இந்த பழத்தில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன. கோடை வெயில் தாக்கத்தால் அதிகமாக தாகம் எடுக்கும்போது வெறும் தண்ணீரை மட்டும் குடிப்பதற்கு பதிலாக, நீர்ச்சத்து நிறைந்த பழங்களையும் சாப்பிட்டால் தாகம் தனிவதோடு மட்டுமல்லாமல், உடல் வறட்சியடையாமல் இருக்கும்.


கோடைகாலத்தில் முலாம்பழம் தெருவோரங்களில் விற்கப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த பழத்தை கோடை காலம் முடியும் வரை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? குறிப்பாக கோடைகால பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். சரி இப்போது கோடைகாலத்தில் முலாம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கோடை காலத்தில் முலாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1. செரிமானம் :

முலாம் பழத்தில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து செரிமான மண்டலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். முக்கியமாக ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்க இந்த பழம் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே கோடைகாலத்தில் செரிமான பிரச்சனை வரக்கூடாது என்று நீங்கள் நினைத்தால் தினமும் முலாம்பழம் சாப்பிடுங்கள்.

இதையும் படிங்க:  உடல் சூட்டுக்கு மட்டுமல்ல.. கோடையில் முலாம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் ஏராளம்! கண்டா விடாதீங்க!

4. சருமத்திற்கு நல்லது :

முலாம்பழம் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இந்த பழத்தில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முக்கியமாக கோடை வெயில் தாக்கத்திலிருந்து உங்களது சருமத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைக்க இந்த பழம் உதவுகிறது.

இதையும் படிங்க:  முலாம்பழம் : இது எக்கச்சக்க நோய்க்கு அருமருந்து...கண்டா விடாதீங்க!

2. இரத்த அழுத்தம் :

முலாம் பழத்தில் இருக்கும் அதிக அளவு பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த படத்தில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே கோடைகாலத்தில் ரத்த அழுத்த பிரச்சனை வருவதை தடுக்க முலாம் பழத்தை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொள்ளுங்கள்.

3. உடல் சூட்டை குறைக்கும் :

பொதுவாக கோடை வெயில் தாக்கத்தால் பெரும்பாலானோர் உடல் சூடு பிரச்சனையை சந்திப்போம். எனவே உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் உங்களுக்கு பெரிதும் உதவும். காரணம் இந்த பழத்தில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளது. எனவே கோடை காலத்தில் அடிக்கடி உடல் சூடு பிரச்சனையை சந்திப்பவர்கள், இந்த பழத்தை தினமும் சாப்பிடலாம்.

Latest Videos

vuukle one pixel image
click me!