Walking This Many Minutes Per Day Increase Your Lifetime : கொரோனாவுக்கு பிறகு நடைப்பயிற்சி மக்களிடையே பிரபலமாகி வருகிறது. தினமும் நடப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடிய பயிற்சியாகும். நடைபயிற்சி உடலில் பல நோய்கள் ஏற்படுவதை தடுத்து ஆயுளை அதிகரிப்பதாக ஆய்வுகளும் காண்டறிந்துள்ளன. இதற்காக பல ஆயிரம் காலடிகளோ, பல மைல்களோ நடக்க வேண்டியதில்லை. சில நிமிடங்கள் நடப்பதே ஆயுளை அதிகரிக்குமாம்.
25
How Many Minutes of Walking Per Day?
ஆய்வில் தகவல்:
அண்மையில் பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியான மெட்டா பகுப்பாய்வு சில நிமிடங்கள் நடப்பதையும், ஆயுள் அதிகரிப்பையும் விளக்கிறது. இந்த ஆய்வில் 30 மில்லியனுக்கும் அதிகமானோரை கொண்டு 196 சக மதிப்பாய்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் செயல்பாடு, ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒரு வாரத்தில் 75 நிமிடங்கள் மிதமான அல்லது தீவிர உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஆரம்பகால இறப்பின் ஆபத்துகள் 23 சதவீதம் குறைவாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
ஒவ்வொருவரின் தனிப்பட்ட இலக்குகளை பொறுத்து நடைபயிற்சி மாறுபடுகிறது. எடையை குறைக்க நினைப்பவர் ஒரு மணி நேரம் வரை விறுவிறுப்பான நடைபயிற்சி மேற்கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்திற்காக நடக்க தொடங்குபவர் அதற்கேற்ற இலக்குகளை வைத்துக் கொள்ளலாம். மேலே குறிப்பிட்ட ஆய்வில் தினமும் 11 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தவர்களுக்கு இறப்பின் அபாயம் குறைந்துள்ளது. அவர்கள் வாரத்திற்கு 75 நிமிடங்கள் நிலையான வேகத்தில் நடப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
வாரத்திற்கு 75 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது உங்களுடைய ஆயுள் காலத்தை அதிகரிக்கும் என்பது ஆய்வில் சொல்லப்பட்ட உண்மையாக இருந்தாலும், ஒரு நாளைக்கு வெறும் 11 நிமிடங்கள் மட்டுமே நடக்க வேண்டும் என்பதில்லை. 11 நிமிடங்களுக்கு நடப்பதை நிறுத்த வேண்டும் என இதை புரிந்து கொள்ளக் கூடாது. அதைப் போல ஒரு நாளைக்கு 5000 காலடிகளுக்கு குறைவாக நடப்பதால் எந்த பலன்களும் இல்லை என்றும் சொல்லிவிடமுடியாது. நடைபயிற்சி உங்களுடைய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய மிதமான பயிற்சியாகும். உங்களுக்கு எவ்வளவு நேரம் நடக்க முடியுமோ அவ்வளவு நேரம் நீங்கள் நடக்கலாம்.
55
How Many Minutes of Walking Per Day?
தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்த வேண்டும். அது வெறும் நடைபயிற்சியாக இருந்தாலும் நல்லது தான். ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட காலடிகளை இலக்காகக் கொண்டு நடப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்யக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.