
What is the Reason for Belly Fat in Men at 30 : பொதுவாக ஆண்கள் எல்லோருமே தொப்பை இல்லாமல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த கொடுப்பினை எல்லாருக்கும் அமைவதில்லை. பலரும் இதற்காக தவறான முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலரோ எந்தவிதமான முயற்சிகளையும் எடுப்பதில்லை. அதிலும் குறிப்பாக 30 வயதில் இருக்கும் ஆண்களுக்கு தொப்பை இருப்பது அவமானமாக உணருகிறார்கள்.
உண்மையில், 30 வயதில் இருக்கும் ஆண்கள் பெரும்பாலானோர் தங்களது ஆரோக்கியத்தின் மீது எந்தவித அக்கறையும் காட்டுவதில்லை. இதற்கு தற்போதைய வாழ்க்கை முறை, அதிக வேலைப்பளு போன்றவை இருந்தாலும் இன்னும் சில காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: ஒவ்வொரு ஆண்களும் இந்த 5 விஷயங்களை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க.. ஹெல்தியா இருப்பீங்க!!
30 வயதிலேயே ஆண்களுக்கு தொப்பை வர காரணங்கள்:
1. கார்போஹைட்ரேட் உணவுகள் - அரிசி, சப்பாத்தியில் இருக்கும் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். உடலில் தேவைக்கு அதிகமாக குளுக்கோஸ் சேரும்போது அது கொழுப்பாக மாறி வயிற்றை சுற்றி உள்ள பகுதிகளில் குவிந்து விடுகின்றனர். இதன் விளைவாக தொப்பை உருவாகிறது.
2. புரோட்டீன் உணவுகள் - புரோட்டின் உணவுகளை அதிகமாகவும், குறைந்த அளவு இறைச்சியும் எடுத்துக் கொண்டால் அவை வயிற்றுப் பகுதி தசைகளில் வளர்ச்சியில் குறைபாட்டை உண்டு பண்ணும். இதன் விளைவாக அந்த வெற்றிடத்தில் கொழுப்புகள் நிரம்பி தொப்பையை உருவாக்கின்றன.
3. பதப்படுத்தப்பட்ட உணவுகள் - சர்க்கரை மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள பதப்படுத்த உணவுகள் தற்போது மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. ஆனால் இவை ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீமை தான் விளைவிக்கும். குறிப்பாக இந்த உணவுகள் குடல் இயக்கத்தில் கோளாறை ஏற்படுத்தி வீக்கத்தை உண்டாக்கும். மேலும் இந்த மாதிரியான உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் உடலில் கெட்ட பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைந்து, வயிற்றில் தொப்பையை உருவாக்கும்.
4. ஹார்மோன் உற்பத்தி - டெஸ்ட்டோஸ்டெரோன் மற்றும் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தி குறையும் போது, கொழுப்புகளானது வயிற்றில் சேர்ந்து தொப்பையை உருவாக்க காரணமாகின்றன.
5. பரம்பரை பிரச்சனை - சில சமயங்களில் பரம்பரை பிரச்சனை காரணமாக கூட வயிற்று உள் பகுதியில் கொழுப்பு சேர்ந்து விடும். ஒரு சில பேருக்கு தான் தொப்பை உருவாகுவதற்கு இது காரணமாகும்.
6. உட்கார்ந்த நிலை - காரில் அலுவலகம் செல்வது, நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வது என எந்தவித உடல் அசைவுமின்றி நாளின் தொடக்கம் முதல் முடிவு வரை இருந்தால் வயிற்றில் இருக்கும் கலோரிகள் எரிக்கப்படாமல் வயிற்றில் சுற்றி தங்குகின்றன. இதன் விளைவாக தொப்பை உருவாகின்றன.
இதையும் படிங்க: தினமும் 4 பல் பூண்டை இப்படி சாப்பிடுங்க! ஆண்களின் பாலியல் பிரச்சனை முதல்..பல பிரச்சனைகளுக்கு குட் பை சொல்லுங்க
7. மன அழுத்தம் - மன அழுத்தத்தின் காரணமாக கார்ட்டிசால் ஹார்மோன் சுரப்பி அதிகரிக்கும். இந்த ஹார்மோன் ஆனது வயிற்றை சுற்றியுள்ள பகுதியில் கொழுப்பை சேமித்து வைத்து தொப்பையை உருவாக்க காரணமாக அமையும்.
8. ஆரோக்கியமற்ற குடல் பகுதி - குடல் பகுதி ஆரோக்கியமற்றதாக இருந்தால் வீக்கம், கெட்ட பாக்டீரியாக்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகி வயிற்றை நிரந்தரமாக உப்பி செய்து தொப்பையை உருவாக்கி விடும்.
குறிப்பு : இளம் வயதிலேயே ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தொப்பை இல்லாமல் நலமுடன் வாழலாம்.