Details On Type 5 Diabetes : பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணு மூலம் நீரிழிவு நோய் வரலாம். ஒருவேளை பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைகளுக்கு வரவும் 50 சதவீதம் வாய்ப்புள்ளது. இந்நிலையில் டைப் -1, டைப் -2 நீரிழிவு நோய் தவிர, புதியதாக டைப் 5 நீரிழிவு நோய் இருப்பதாக தற்போது உறிதியாகியுள்ளது. இந்த நோய் குழந்தைகளை பாதிக்கலாம். பதின்பருவம் அல்லது 20 வயதுகளில் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு டைப் 5 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புள்ளது.
25
Details On Type 5 Diabetes
சர்க்கரை நோய்:
பொதுவாக சர்க்கரை நோய் வருவதற்கு மரபணு ரீதியான காரணங்கள் சொல்லப்படுவதுண்டு. உடலின் தேவைக்கு அதிகமாக உண்பவர்கள், உடற்பயிற்சி போன்ற உடற்செயல்பாடு அறவே இல்லாதவர்களுக்கும் இந்நோய் தாக்கும் அபாயம் உள்ளது. டைப் 1 சர்க்கரை நோய் பாதிப்பு பரம்பரை பாதிப்பு காரணமாக வரலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு வரலாம். டைப் 2 சர்க்கரை நோய் மரபணு, முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள், போதிய உடற்செயல்பாடு இல்லாததால் வரும். டைப் 2 சர்க்கரை நோயின் பாதிப்புதான் இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்த நோய்களை கட்டுக்குள் வைக்கும் அதே நேரத்தில் இந்தியாவில் டைப் 5 நீரிழிவு நோய் இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
35
Details On Type 5 Diabetes
டைப் 5 நீரிழிவு நோய்;
அண்மையில் பாங்காக்கில் நடைபெற்ற சர்க்கரை நோய் குறித்த மாநாட்டில் பேசப்பட்டவைகள் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டில் டைப் 5 நீரிழிவு நோய் பற்றி சொல்லப்பட்டது. இந்த நோயானது இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதைத் தடுக்க வளரும் குழந்தைகளுக்கு சத்தான சரிவிகித உணவினை அளிக்க வேண்டும்.
இந்த டைப் 5 நீரிழிவு நோய் ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் தொடர்புடையது. டைப் 1 மற்றும் டைப் 2 ஆகிய சர்க்கரை நோயில் இருந்து வேறுபட்டது. டைப் 5 சர்க்கரை நோய் ஒல்லியான, ஊட்டச்சத்து குறைபாடுடன் காணப்படும் இளம் வயதினரை பாதிக்கும்.
- கர்ப்பகாலத்தில் பெண்கள் சத்தான உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தொடர்ந்து அளிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து சர்க்கரை நோயை தடுக்கலாம்.
- பதின்பருவ குழந்தைகளுக்கு உணவில் அதிகளவு புரதமும், குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகளும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். வைட்டமின் சத்துகளை எடுத்து கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.