கோடையில் முகத்திற்கு கடலைமாவு எப்படி பயன்படுத்தனும் தெரியுமா? கருமை நீங்கிடும்

Published : Apr 21, 2025, 03:05 PM ISTUpdated : Apr 21, 2025, 03:12 PM IST

கோடை காலத்தில் பளபளப்பாக வைக்க கடலைமாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

PREV
16
கோடையில் முகத்திற்கு கடலைமாவு எப்படி பயன்படுத்தனும் தெரியுமா? கருமை நீங்கிடும்

Ways to Use Gram Flour on Face During Summer : பொதுவாக அனைவரும் பிரகாசமான, பளபளப்பான மற்றும் மென்மையான சருமம் வேண்டும் என்று தான் விரும்புவார்கள். இதற்காக பலர் பலவிதமான ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துகிறார்கள். அதிலும் சிலர் தங்கள் விருப்பப்படி சருமத்தை பெற்றாலும், பலர் சருமம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், கோடை காலத்தில் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்ற பிரச்சனைகள் வரும். இது முகத்தின் பளபளப்பைக் குறைப்பது மட்டுமில்லாமல், முகத்தின் அழகைக் கிடைத்துவிடும்.

 

26
Ways to Use Gram Flour on Face

இவற்றை குணப்படுத்த பல்வேறு வகையான பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக கடலை மாவு உங்களுக்கு உதவியாக இருக்கும். இதன் உதவியுடன் முகத்தில் இருக்கும் பருக்கள், தழும்புகளை சுலபமாக நீக்க முடியும். கூடுதலாக முகம் பளபளப்பாகவும், பிரகாசமாகவும் மாறும். எனவே கடலை மாவை பயன்படுத்தி முகத்தை அழகாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க:  வெயில்ல முகம் கருப்பாயிடுச்சா? இரவில் '1' ஸ்பூன் தயிர்ல இந்த பேஸ் பேக் போடுங்க!!

36
Gram Flour and Lemon

கடலை மாவை முகத்திற்கு எப்படி பயன்படுத்துவது?

கடலை மாவு முகத்திற்கு பயன்படுத்துவது நல்லது. ஆனால் இது எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. முகத்திற்கு கடலை மாவு போடுவதால் அதன் முழு பலனைப் பெற எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

1. கடலை மாவு - எலுமிச்சை:

2 ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதை உங்கள் முகம் முழுவதும் தடவி, சுமார் 20 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். 

நன்மை : எலுமிச்சை சாற்றில் இருக்கும் சிட்ரிக் அமில முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் கருமையை குறைக்க பெரிதும் உதவும்.  கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலவையானது சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை நீக்கும் மற்றும் முகத்திற்கு பளபளப்பை கொண்டு வரும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

46
Gram Flour and Curd

2. கடலை மாவு - தயிர்:

2 அல்லது 3 ஸ்பூன் கடலை மாவுடன், 2 ஸ்பூன் தயிர் கலந்து அந்த பேஸ்ட்டே முகம் முழுவதும் தடவி நன்கு காய்ந்த பிறகு முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

நன்மை : இந்த ஃபேஸ் பேக் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் தழும்புகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் மற்றும் சருமத்தை பள பளப்பாக வைத்திருக்க உதவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:  கோடையில் சருமம் வறட்சியை தடுக்கும் உருளைக்கிழங்கு  ஃபேஸ் பேக்!! 

56
Gram Flour and Rose Water

3. கடலை மாவு - ரோஸ் வாட்டர்:

ஒரு ஸ்பூன் கடலை மாவுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

நன்மை : இந்த ஃபேஸ் பேக் உங்களது முகத்தை பளபளப்பாகவும், அழகாகவும் மாற்ற உதவும். இது தவிர முகத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைக்கும். இந்த ஃபேஸ் பேக் அனைத்து சருமத்திற்கு ரொம்பவே நல்லது. குறிப்பாக வறண்ட சருமத்திற்கு நன்றாக வேலை செய்யும்.

66
Gram Flour and Raw Milk

4. கடலை மாவு - பச்சையப்பால்:

இரண்டு ஸ்பூன் கடலை மாவில் 3-5 ஸ்பூன் பச்சை பால் கலந்து அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

நன்மை : பச்சை பால் சருமத்தில் படிந்துள்ள தூசி அழுக்கு என அனைத்தையும் எளிதில் நீக்கும். இந்த ஃபேஸ் பேக் உங்களது முகத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்ற உதவும். முக்கியமாக சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தும். இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories