
Benefits of Raisin Water For Hair Growth : நீளமான கூந்தல் விரும்பாத பெண்கள் யாருமே இல்லை. ஆனால் தற்போது மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் பெரும்பாலான பெண்கள் முடி உதிர்தல் பிரச்சனையை சந்திக்கிறார்கள். மேலும் நீங்கள் நீளமான முடியை பெற விரும்பினால் இயற்கையான மற்றும் மலிவான விலையில் ஒரு வழியை தேடுகிறார்கள் என்றால், உங்களுக்கு உதவும் உலர் திராட்சை நீர். ஆம், உலர் திராட்சை தண்ணீர் ஆரோக்கியமான மற்றும் வேகமாக முடி வளர உதவும் ஒரு பயனுள்ள வீட்டு வைத்தியம் ஆகும். சரி இப்போது இந்த பதிவில் உலர் திராட்சை தண்ணீர் முடி வளர்ச்சிக்கு இவ்வாறு உதவுகிறது என்பதை குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: Whey Protein : முடி உதிர்தலுக்கு 'வே புரோட்டீன்' காரணமா? முழுத் தகவல்கள் இதோ!!
முடி வளர்ச்சிக்கு உலர் திராட்சை தண்ணீர் நன்மைகள்:
உலர் திராட்சை தண்ணீரைத் தொடர்ந்து குடித்து வந்தால் முடி உதிர்தல் குறைந்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். அந்த நீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் உள்ளதால் இவை முடியின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றது. மேலும் முடியின் நுண்குழாய்களை வலுப்படுத்தி, உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
இதையும் படிங்க: வழுக்கை தலையில் முடி வளர கறிவேப்பிலையை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!
நன்மைகள்:-
1. முடி உதிர்தலை குறைக்கும் - உலர் திராட்சை நீர் முடியின் நுண்குழாய்களை வலுப்படுத்தி, உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் உதிர்களை குறைக்கும்.
2. முடி வளர்ச்சி ஊக்குவிக்கும் - உலர் திராட்சை தண்ணீரில் வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளதால் அவை முடியின் வேர் பகுதியை வழிபடுத்தி முடி வளர்ச்சி ஊக்குவிக்கின்றது.
3. கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும் - உலர் திராட்சை தண்ணீரில் இருக்கும் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். இது முடியை வலுப்படுத்தி நெகிழ்ச்சி தன்மையை மேம்படுத்தும்.
4. உச்சந்தலை ஆரோக்கியம் - திராட்சையில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி, உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும். மேலும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
5. முடி வேர்களை வலிமையாக்கும் - திராட்சையில் இருக்கும் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின்கள் மற்றும் இயற்கை சர்க்கரை ஆகியவை முடியின் வேர்களை வலுவாக்கி உடையாமல் தடுக்க உதவும்.
6. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் - உலர் ஊராட்சி தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடியின் வேர்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வழிவகுக்கும்.
7. முடியை பளபளப்பாக்கும் - உலர் திராட்சை நீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், முடி அமைப்பை மேம்படுத்தும். இதனால் முடி பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
8. பொடுகை நீக்கும் - உலர் திராட்சை தண்ணீரில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உச்சந்தலையில் ஏற்படும் வறட்சி, பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகளை போக்க உதவும்.
உலர் திராட்சை தண்ணீர் தயாரிப்பது எப்படி?
தேவையான அளவு உலர் திராட்சையை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு பிறகு மறுநாள் காலை அந்த நீரை குடிக்க வேண்டும் உலர் திராட்சையும் சாப்பிடலாம் இப்படி தொடர்ந்து குடித்து வந்தால் விரைவில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
குறிப்பு : உலர் திராட்சை தண்ணீரை எல்லோரும் குடிப்பதற்கு ஏற்றதல்ல அதாவது கர்ப்பிணி பெண்கள் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் இந்த தண்ணீரை குடிக்கும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.