How Does Turmeric Curcumin Help To Skin And Hair : மஞ்சள் இல்லாத வீடுகளை காண்பதே கடினம். அனைத்து வீடுகளிலும் இருக்கும். உணவு, மருந்துகள், சருமத்திற்கு ஃபேஸ்பேக் என பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளுக்குள் காணப்படும் குர்குமின் பல ஆரோக்கிய நன்மைகளை செய்யக் கூடியது. அதைப் போலவே மஞ்சளில் உள்ள குர்குமினும் பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இந்தப் பதிவில் மஞ்சள், குர்குமின் ஆகிய இரண்டும் சருமத்திற்கும், முடிக்கும் எவ்வாறு உதவும் என இங்கு காணலாம்.
25
Turmeric Benefits
மஞ்சள் மகிமை;
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன் ஆக்ஸிஜனேற்றங்கள் காணப்படுகின்றன. மஞ்சளில் உள்ள குர்குமின் தான் அதனுடைய ஆற்றல்வாய்ந்த குணப்படுத்தும் பண்புகளை கொண்டது. ஆனால் மஞ்சளில் சுமார் 2 முதல் 5% வரைதான் குர்குமின் இருக்கிறது. இது தான் பிரகாசமான சருமத்திற்கு உதவும். கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை பளபளப்புடன் வைத்திருக்க உதவுகிறது.
மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருள் மெலனின் உற்பத்தியைக் குறைக்கிறது. முகப்பரு, வீக்கம் போன்றவற்றை எதிர்த்து போராடுகிறது. சரும வெடிப்புகளை தடுத்து எண்ணெய் பசையைக் குறைக்கும். முகத்தில் உள்ள சிவப்பு தடிப்புகளையும் குறைக்கும். குர்குமினில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சுற்றுச்சூழல் மாசு, புற ஊதாகதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.
- தலைமுடியில் மஞ்சளை பேஸ்ட் போல தயாரித்து பயன்படுத்தினால் அரிப்பு, பொடுகு, பூஞ்சை தொற்றுகள் குறைய உதவும். உச்சந்தலையில் ஏதேனும் தோல் அழற்சி இருந்தால் மஞ்சளில் உள்ள குர்குமினின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதை குணப்படுத்த உதவும்.
- உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த மஞ்சள் உதவும். முடியில் மஞ்சள் பயன்படுத்தினால் முடி உதிர்தல் கட்டுப்படுத்தப்படும். உச்சந்தலையில் காணப்படும் நச்சுகளை நீக்கி வேர்களிலிருந்து முடியை உறுதியாக்கும். ஆண்களுக்கு ஏற்படும் சொட்டை பிரச்சனையை தடுக்கும். மஞ்சளை ஏதேனும் எண்ணெய் சேர்த்து தேய்த்து குளிப்பது நல்லது.
55
Turmeric Benefits For Face
மஞ்சள் ஃபேஸ் பேக்:
மஞ்சள் ஃபேஸ் பேக் தயாரிக்க 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் 2 ஸ்பூன் தயிர் அல்லது தேன் சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் சில துளிகள் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசிவிட்டு 10–15 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின் முகத்தை கழுவினால் பளபளப்பான முகத்தைக் காண்பீர்கள். மஞ்சளில் உள்ள குர்குமின் தான் இதற்கு காரணமாகும். நீங்கள் சீரம்கள், ஃபேஸ் வாஷ், மாய்ஸ்சரைசர்கள் வாங்கும்போது அதில் குர்குமின் இருக்கிறதா என பார்த்து வாங்குங்கள்.