வாக்கிங் தவிர!! அமர்ந்தபடி  60 வயதுக்கு மேற்பட்டோர் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் தெரியுமா? 

Published : Apr 22, 2025, 08:24 AM ISTUpdated : Apr 22, 2025, 08:34 AM IST

நடைபயிற்சியை தவிர 60 வயதுக்கு மேற்பட்டோர் செய்ய வேண்டிய எளிய உடற்பயிற்சிகளை இங்கு காணலாம். 

PREV
16
வாக்கிங் தவிர!! அமர்ந்தபடி  60 வயதுக்கு மேற்பட்டோர் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் தெரியுமா? 

Simple Exercise tips for Seniors Over 60 at Home : எந்த உடற்பயிற்சியுமே செய்யாமல் இருப்பதை விட தினமும் நடைபயிற்சி செய்வது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். தினமும் ஏதேனும் உடல் செயல்பாடுகளில் ஈடுபட்டால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன சர்க்கரை நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களின் தாக்கத்தையும் குறைக்கிறது. 60 வயதிற்கு மேற்பட்டோர் நடைபயிற்சியை தவிர சில உடல் செயல்பாடுகளை அன்றாட வாழ்க்கையில் இணைத்து கொள்வதன் மூலம் அவர்களுடைய உடல் நலம் மேம்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.  
 

26
Simple Exercise tips for Seniors

மூளையும், மனநலமும்!!

தினமும் ஏதேனும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது உடல் நலத்தை தவிர மனநலத்தையும் மேம்படுத்துகிறது.  உடற்பயிற்சிகள் எண்டோர்பின்களை வெளியிட உதவுகின்றன.  இதனால் மனநலம் சீராக இருக்கிறது. வயதாகும்போது ஏற்படும் தடுமாற்றம், பதற்றம் போன்றவற்றை குறைக்க உடற்பயிற்சிகள் உதவுகின்றன. உடலை சமநிலையில் வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சிகள் மனநலன் மட்டுமின்றி மூளையின் செயல்பாட்டிற்கும் அத்யாவசியமானவை.  தினமும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதால் வயதானவர்களுக்கு ஏற்படும் டிமென்ஷியா பிரச்சனை வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. 

36
Simple Exercise tips for Seniors

60 வயதுக்கு மேற்பட்டோர் கவனத்திற்கு! 

இவர்கள் வீட்டில் அதிக நேரம் அமர்ந்திருக்காமல் ஏதேனும் உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். தினமும் நடைபயிற்சி செய்யலாம். அதன் பின்னர் நாற்காலியில் அமர்ந்து செய்யக் கூடிய பயிற்சிகள், யோகா, வலிமை பயிற்சி போன்றவை செய்யலாம். 

குறுநடை:   

குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இதய உடற்பயிற்சி தான் குறுநடை. அதிக தூரம் இல்லாமல் அருகில் 10 முதல் 15 நிமிடங்கள் நடப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும்.  

46
Simple Exercise tips for Seniors

நாற்காலி பயிற்சிகள்: 

வீட்டில் உள்ள நாற்காலியில் அமர்ந்துவிட்டு எழுந்து மீண்டும் அமரும் ஸ்குவாட் பயிற்சிகளை செய்யலாம். இதனால் கீழ் உடல் தசைகள் வலுவாகும். உடலின் சமநிலை மேம்படுகிறது. 

நீச்சல் பயிற்சி: 

வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆறு அல்லது குளங்களில் நீச்சல் அடிக்கலாம். இந்தப் பயிற்சி மூட்டுகளை இலகுவாக்கும். 

இதையும் படிங்க:  தினமும் உடற்பயிற்சி செய்றீங்களா? கண்டிப்பா இந்த 5 உணவுகளை சாப்பிடனும்!

56
Simple Exercise tips for Seniors

சுவரில் புஷ்-அப்: 

மேல் உடலின் தசைகளை வலுப்படுத்த சுவரில் புஷ் அப் செய்யலாம். இதற்கு அதிக ஆற்றல் தேவையில்லை. ஆனால் நல்ல பயிற்சியாக இருக்கும். 

அமர்ந்த நிலை பயிற்சி: 

நாற்காலில் அல்லது கட்டிலில் அமர்ந்தபடி காலை தூக்க வேண்டும். இது கால் தசைகளை வலுப்படுத்தக் கூடிய பயிற்சி. தடுமாறி கீழே விழும் அபாயத்தைக் குறைக்கிறது.

இதையும் படிங்க:  உடற்பயிற்சி செய்த பின் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!! ஒரு பலனும் இல்லாம போய்டும்

66
Simple Exercise tips for Seniors

ஒற்றை-கால் சமநிலை:

இந்த பயிற்சி சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சில நிமிடங்கள் ஒற்றை காலில்  நிற்கவும். பின்னர் மற்றொரு காலை மாற்றி சில நிமிடங்கள் நிற்க வேண்டும். 

சைக்கிள் ஓட்டுதல்:

வீட்டில் நிற்கும் பழைய சைக்கிளை ஸ்டாண்ட் போட்ட படி ஓட்டலாம் அல்லது சில கி.மீ சாலையில் சைக்கிள் ஓட்டிவிட்டு வரலாம். உடற்பயிற்சி உபகரணங்களில் ஒன்றான நிலையான சைக்கிளை வாங்கி வீட்டிலேயே அதில் பயிற்சி செய்யலாம். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கீழ் உடல் தசைகளையும் வலுப்படுத்தக் கூடிய பயிற்சியாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories