How to Follow the 3-3-3 Rule Gym : ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள் உணவு பழக்கம் மட்டுமின்றி உடற்பயிற்சியிலும் சில விஷயங்களை கவனமாக கடைபிடிப்பார்கள். எல்லா நாளும் ஒரே மாதிரியான உடற்பயிற்சி செய்யாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.
24
How to Follow the 3-3-3 Rule Gym
உதாரணமாக திங்கள்கிழமை மார்புப் பகுதியை வலுப்படுத்த உடற்பயிற்சிகளை செய்தால் செவ்வாய்க்கிழமை உடலின் மைய தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை செய்வார்கள். அதை போல இன்னொரு விதியையும் பின்பற்றுகிறார்கள். இதை வீட்டிலும் உடற்பயிற்சி செய்பவர்கள் பின்பற்றலாம். அதுதான் 3 சுற்றுகள், மூன்று பயிற்சிகள், மூன்று முறை 3-3-3 விதியாகும்.
அதாவது 3-3-3 என்ற விதியில் 3 உடற்பயிற்சிகளை செய்வார்கள். ஒவ்வொரு பயிற்சியும் 3 தடவை முறையே 3 விதமான பயிற்சிகளை மீண்டும் மீண்டும் என 3 முறை செய்வார்கள். இப்படி செய்வது உடலுக்கு வலிமையும் சகிப்புத்தன்மையும் அளிக்கிறது.
ஒவ்வொரு செட்டுக்கும் உடலின் வெவ்வேறு தசைகளை இலக்காகக் கொண்ட 3 பயிற்சிகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு பயிற்சியையும் 3 முறை செய்ய வேண்டும். உதாரணமாக, கீழ் உடலை மேம்படுத்தும் ஸ்குவாட் பயிற்சிகள், மேல் உடலை மெருகூட்டும் புஷ்-அப்கள், மையத்தசைகளை வலுவூட்டும் பிளாங்க்ஸ் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக, மொத்தம் மூன்று சுற்றுகளுக்கு (மூன்று செட்) செய்ய வேண்டும். இதை போல வெவ்வேறு தசைகளுக்கான 3 பயிற்சிகளை திட்டமிட்டு செய்யலாம்.