நடக்கும்போது இந்த விஷயம் பண்றீங்களா? அப்ப நடக்குறதே வேஸ்ட்!!
நடைபயிற்சி செய்யும்போது பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.
நடைபயிற்சி செய்யும்போது பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.
Things to Avoid While Walking : உடல்நலனை மேம்படுத்த நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் நடக்கும்போது நான்கு முக்கிய விஷயங்களை கவனிக்கத் தவறினால் ஆரோக்கியத்தில் எதிர் விளைவுள் தான் ஏற்படும். நடைபயிற்சியில் தவறான கால் தசைகளைப் பயன்படுத்தக் கூடாது. கால்களை தூரமாக விரித்து நடப்பது, தலையை வைத்துள்ள விதம், கைகளை அசைக்காமல் நடப்பது உள்ளிட்டவை தவறானவையாகும். நடக்கும்போது அதில் கவனமாக இருக்க வேண்டும்.
அறிவியல் பூர்வமாக பார்க்கும்போது, நடைபயிற்சியில் செய்யும் தவறுகள் முதுகு வலி, மூட்டு வலி, உடல் தோரணையில் மாற்றம், குறைவான கலோரி எரிப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கும். நீங்கள் ரொம்ப தூரம் நடந்த பின் கீழ் முதுகில் வலி வந்தால் தவறாக நடந்துள்ளதை காட்டுகிறது. நடக்கும்போது இடுப்பு நெகிழ்வு தசைகளை அதிகம் பயன்படுத்தும்போது கீழ் முதுகில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி வரலாம். அதனால் சரியான தோரணையில் நிமிர்ந்து கைகளை வீசி நடங்கள். இதனால் வயிற்று தசைகள் இயங்கும்.
இதையும் படிங்க: உடல் எடை குறைய! வெறும் வயிற்றில் தான் வாக்கிங் போகனுமா?
நடக்கும்போது கால்களை முழுவதுமாக விரித்து நடக்க வேண்டிய அவசியம் இல்லை. குதிகால், உள்ளங்கால் தரையில் படும்படி நடந்தால்போதும். கால்களை அகலமாக விரித்து நடப்பதால் மூட்டுகளில், முழங்கால்களில் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு வலி ஏற்படும். கீழ் உடலின் தசைகளான இடுப்பு, மூட்டு, முழங்காள் சரியாக வேலை செய்வதைத் தடுக்கிறது.
இதையும் படிங்க: வாக்கிங் போக சிறந்த நேரம் இதுவா!! காலை, மாலை, மதியம் எப்போது நடக்கலாம்?
தரையை பார்த்தபடி குனிந்து நடப்பது, செல்போனைப் பார்ப்பது ஆகியவை தவறான போக்காகு.. இதனால் உடல்நலக் கோளாறுகள் வரலாம். பலர் தலையைக் குனிந்து நடக்கிறார்கள். இதனால் மேல் முதுகு வலி வரலாம். தலைகுனிந்து நடந்தால் முதுகுத்தண்டு பிரச்சனைகளுடன் உடலுக்குள் செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் மாறுகிறது. முதுகெலும்பை நேராக வைத்தபடி நிமிர்ந்து நடக்க வேண்டும். நேராக பார்க்க வேண்டும்.