வெயிலில் செல்லாமல் வீட்டிற்குள் இருப்பதால் நன்மைகள், தீமைகள்!!
கோடை காலத்தில் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கோடை காலத்தில் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Pros and Cons of Staying Indoors During Summer : கோடை காலம் தொடங்கிவிட்டதால் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே சொல்வதற்கு கூட தோன்றவில்லை. மேலும் வீட்டிற்குள் இருப்பது தான் பாதுகாப்பானது என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் உண்மையில் வீட்டிற்குள்ளே இருப்பதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. குறிப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்கும்போது உணவு, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தினால் வெப்பத்தால் ஏற்படும் விளைவுகளை சுலபமாக தவிர்க்கலாம். சரி, இப்போது கோடை காலத்தில் வீட்டிற்குள்ளே இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
- வீட்டிற்குள் இருப்பதால் சூரியனின் கடுமையான வெப்பம், யூவி கதிர்கள் மற்றும் வெப்ப அதிர்ச்சிகள் ஆகியவற்றை தவிர்க்கலாம்.
- முக்கியமாக சரும பிரச்சனைகள் ஏற்படாது. அதாவது வெளியில் நீண்ட நேரம் இருப்பதால் சூரியனால் பல சரும பிரச்சனைகள் ஏற்படும்.
- வீட்டின் சூழல் நன்றாக இருப்பதால் மன அழுத்தம் குறைந்து, மன அமைதியை தரும்.
இதையும் படிங்க: கோடை வெயிலுக்கு இளநீர் நல்லது: ஆனா எப்போது குடிக்க வேண்டும் தெரியுமா?
- வெயிலுக்கு பயந்து வீட்டிற்குள் இருந்தால் உடல் செயல்பாடு செய்வது குறையும்.
- சூரியனிலிருந்து போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்காமல் போகும்.
- ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருந்தால் மன அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
- வெப்ப தாக்கத்தின் காரணமாக உணவு பழக்கம் மற்றும் தூக்கம் பாதிக்கப்படலாம்.
இதையும் படிங்க: கோடைகாலத்தில் வெந்நீர் குடிக்கலாமா? பாதிப்பு ஏற்படுமா?
உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள் : தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம் பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுபோல உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய பானங்களை குடியுங்கள். முக்கியமாக ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்யுங்கள் : கோடையில் உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும். வாக்கிங், ஸ்கிப்பிங், யோகா போன்ற வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய பயிற்சிகளை செய்யலாம். உடற்பயிற்சி செய்த பிறகு குளிர்ந்த நீரில் குளித்தால் உடல் வெப்பம் குறையும்.
மன ஆரோக்கியம் : மன அழுத்தத்தை குறைக்க தியானம் மற்றும் மன அமைதிக்கான பயிற்சி செய்யுங்கள். வீட்டிற்குள் நேரத்தை பயனுள்ளதாக செலவழிக்க புத்தகம் படித்தல் போன்ற உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு விஷயங்களை செய்யலாம். இல்லையென்றால், குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிடுங்கள்.
காலை மற்றும் இரவு வீட்டில் ஜன்னல்களை திறந்து வைக்கலாம். அதுபோல சூரிய வெப்பத்திலிருந்து தப்பிக்க திரைசீலைகளை பயன்படுத்தலாம் இது வெப்பம் உள்ளே வராமல் தடுக்க உதவும்.
குறிப்பு : வெயில் காலத்தில் வெளியே செல்லும்போது கண்டிப்பாக கண்ணாடி, தலைப்பாகை போன்றவற்றை பயன்படுத்த மறக்காதீர்கள்.