அதிகாலையில் வாக்கிங் செல்வது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. ஆனாலும், குளிர்காலத்தில் குளிர்ச்சியான சூழல் காரணமாக சிலர் வாக்கிங் செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த பதிவில் யாரெல்லாம் குளிர்காலத்தில் அதிகாலையில் வாக்கிங் செல்லக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
27
உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் :
பொதுவாக குளிர்காலத்தில் உடல் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் நரம்பு மண்டலத்தின் செயல் அதிகரித்து, இரத்த அழுத்தத்தை கூட்டும். இதன் விளைவாக இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்கும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் குளிர்காலத்தில் காலை நேரத்தில் வாக்கிங் செல்வதை தவிர்ப்பது.
37
மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் :
மூட்டு வலி, முழங்கால் வலியானது வழக்கத்தை விட குளிர்காலத்தில் விறைப்பாக இருக்கும். மேலும் முழங்கால், மூட்டுகளில் இருக்கும் இரத்த நாளங்கள் சுருங்கி, கடுமையான வலியை ஏற்படுத்தும். எனவே குளிர்காலத்தில் மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் அதிகாலையில் வாக்கிங் செல்வதை கைவிடுவது நல்லது.
குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவாக இருப்பதால் இதயத்தில் இரத்தநாளங்கள் சுருங்கத் தொடங்கும். மேலும் உடல் முழுவதும் செல்லக்கூடிய இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதயத்திற்கு செல்லும் ஆக்சிஜனுடைய அளவும் குறைய தொடங்கும். இதனால் இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். இதன் விளைவாக மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளன. எனவே இதய நோயாளிகள் குளிர்காலத்தில் அதிகாலையில் வாக்கிங் செல்வதை தவிர்க்கவும்.
57
ஆஸ்துமா நோயாளிகள் ;
மழை, குளிர்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் மூச்சு விடுவதை சிரமமாக உணர்வார்கள். இந்த சீசனில் வெப்பநிலை குறைவாக இருப்பதால் வியர்வையும் குறைந்த அளவே வெளியேறும். இதனால் உடம்பில் அதிகப்படியான நீர் சேர்ந்து வெளியேற்ற முடியாமல் நுரையீரலானது திக்கி திண்டாடும்.
67
சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள்
சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனை உள்ளவர்களும் குளிர்காலத்தில் அதிகாலையில் செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பிரச்சனையை இன்னும் அதிகரிக்கும்.
77
நினைவில் கொள் :
- மேலே குறிப்பிட்டுள்ள நபர்கள் குளிர்காலத்தில் வாக்கிங் செல்ல விரும்பினால் சூரியன் உதித்த பிறகு வாக்கிங் செல்வது நல்லது. மேலும் காதுகளை மூடிக் கொள்ளுங்கள்.
- உடலை இதமாக வைத்திருக்கும் ஆடைகளை அணிந்து செல்லவும்.
- காலையில் எழுந்தவுடனே வாக்கிங் போகாமல் சிறிது நேரம் வீட்டில் இருந்து உடலை பயிற்சி செய்ய தொடங்குங்கள். வாக்கிங் செல்வதற்கு முன் மூச்சு பயிற்சி செய்ய மறக்காதீர்கள்.