Fruits for Migraine Relief : ஒற்றைத் தலைவலியால் அவதியா? இந்த '4' பழங்களில் தீர்வு இருக்கு! உடனடி நிவாரணம்

Published : Nov 21, 2025, 05:47 PM IST

ஒற்றைத் தலைவலியிலிருந்து விரைவாக நிவாரணம் கிடைக்க என்னென்ன பழங்களை சாப்பிட வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

PREV
15
Best Fruits for Migraine Relief

தலைவலி எல்லாருக்கும் வரும் ஒரு பொதுவான பிரச்சனை. மன அழுத்தம், தூக்கமின்மை, வேலைப்பளு போன்ற காரணங்களால் இது வரும். ஆனாலும் சில நேரங்கள், வாரங்கள் தொடர்ந்தால் அது ஒற்றைத் தலைவலியாகும் இந்த தளபதியானது ரொம்பவே வேதனையானது.

மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு சாப்பிடுதல், போதுமான தண்ணீர் குடிக்காமல் இருத்தல் வேலை அழுத்தம் போன்ற பல காரணங்களால் ஒற்றைத் தலைவலி ஏற்படும். இந்த தலைவலியிலிருந்து நிவாரணம் பெற மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மட்டுமல்ல சில பழங்களை சாப்பிடுவதன் மூலமும் சரி செய்துவிடலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

25
தர்பூசணி

தர்பூசணி ஒற்றைத் தலைவலி பிரச்சனைக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளன. எனவே இதை சாப்பிட்டால் தசைகளை தளர்த்தி தலைவலியை குறைக்க உதவுகிறது. நீர்ச்சத்து மட்டுமல்ல பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் தர்பூசணியில் நிறைந்துள்ளன .இவை வலியை குறைக்க உதவும். எனவே ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவது நல்லது.

35
ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, பெட்டியின் ஆகியவை உள்ளன. அவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆப்பிள் ஒற்றைத் தலைவலியை குறைக்க உதவுகின்றன. இது தவிர குமட்டல், வாந்தி போன்ற பிரச்சினைகளை குறைக்கவு உதவும்.

45
வாழைப்பழம்

வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை நோயை எதிர்த்து போராடும் திறனை கொண்டுள்ளன. வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்துள்ளன அவை ஒற்றை தலைவலியை குறைக்க உதவுகின்றன.

55
அவகேடோ

ஒற்றைத் தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் அவகேடோ சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அவகேடோவில் பொட்டாசியம், லுடீன், பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள். உள்ளன அவை ஒற்றுத் தலைவலியை குறைக்க பெரிதும் உதவுகின்றன.

ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் இந்த பழங்களுடன் சத்தான உணவை சாப்பிடுதல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மிகவும் அவசியம். யோகா தியானம் உடற்பயிற்சி ஆகியவையும் ஒற்றை தலைவலியை குறைக்க உதவுகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories