பற்கள் வெள்ளையாக இருந்தால்தான் சிரிக்கும் போது முகத்திற்கு அழகை கொடுக்கும். ஆனால் பற்களை சரியாக பராமரிக்கவில்லை என்றால் உள் மற்றும் வெளி பக்கத்தில் விடாப்பிடியான கறைகள் உண்டாகிவிடும். இந்த கறைகளை நீக்குவதற்கு பல் டாக்டரிடம் நிறைய காசு கொடுத்து கிளீன் பண்ணிடுவோம். ஆனால் செலவே இல்லாமல் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து பல்லில் இருக்கும் விடாப்படியான கறையை சுலபமாக நீக்கிவிடலாம். அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
25
பேக்கிங் சோடா :
பற்களில் இருக்கும் விடாப்பிடியான கறக்யை அகற்ற பேக்கிங் சோடா உதவும். இதற்கு 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு டூத் பேஸ்ட் மற்றும் உப்பு கலந்து அதை கொண்டு பற்களில் தேய்க்கவும். பிறகு சூடான நீரில் வாய் கொப்பளிக்கவும்.
35
கொய்யா இலைகள் ;
கொய்யா இலைகளில் ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. அவை பற்களில் ஏற்படும் தொற்றுக்களை, ஈறுகளில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கவும், பற்களில் இருக்கும் விடாப்படியான கறைகளை அகற்ற உதவுகிறது. எனவே, தினமும் 2 கொய்யா இலைகளை சுத்தம் செய்து மென்று துப்பவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்தால் போதும்.
தேங்காய் எண்ணெய் வாயில் உண்டாகும் பல பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு அளிக்கும். தினமும் காலை எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லின் செய்து வந்தால் வாயில் இருக்கும் கிருமிகள், பாக்டீரியாக்கள் அனைத்தும் அழிந்துவிடும். பல் சிதைவு, பல் சொத்தை, ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பல பிரச்சினைகள் நீங்கும்.
55
தேங்காய் எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா :
இவை இரண்டையும் கொண்டு பற்களின் உள் மற்றும் வெளிப்புறத்தில் இருக்கும் விடாப்பிடியான கறையை போக்க முடியும். இதற்கு ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு குழைக்கவும். அதை ஒரு டூத் பேஸ்ட் கொண்டு தொட்டு பற்களை தேய்க்க வேண்டும். இப்படி தேய்க்கும் போது பற்களில் இருக்கும் விடாப்படியான கறைகள் நீங்குவது மட்டுமல்லாமல் வாய் துர்நாற்றமும் நீங்கும்.