பொடுகு தொல்லை என்பது தலைமுடி பிரச்சனைகளில் மிகவும் மோசமான பிரச்சனையாகும். பொடுகு காரணமாக உச்சந்தலையில் அரிப்பு மற்றும் முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். இதுபோன்ற சமயங்களில் பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் சில விஷயங்களை செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தலையில் பொடுகு அதிகமாகும். இந்த பதிவில் பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் செய்யக்கூடாத விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
26
தலைக்கு குளிப்பது :
பொடுகு தொல்லை இருப்பவர்கள் தலைக்கு குளிப்பதை ஒருபோதும் தவிர்க்கவே கூடாது. இல்லையெனில் பொடுகு உற்பத்தி மேலும் அதிகமாகிவிடும். அது மட்டுமில்லாமல் உச்சந்தலையில் அழுக்கு, தூசி, வியர்வை போன்றவை சேர்ந்து பொடுகை இன்னும் மோசமாக்கும். எனவே பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் வாரத்திற்கு 3-4 நாட்களாவது கண்டிப்பாக தலைக்கு குளிக்க வேண்டும்.
36
கண்டிஷனர் பயன்படுத்தும் முறை :
பொதுவாக நாம் தலை முடிக்கு கண்டிஷனர் பயன்படுத்தும் போது சில சமயங்களில் நமக்கே தெரியாமல் அது ஸ்கால்ப்பில் பட்டுவிடும். எனவே, பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் இந்த விஷயத்தில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கண்டிஷனர் ஸ்கால்ப்பில் பட்டால் அது ஸ்கேல்பின் துளைகளை மூடி பொடுகை இன்னும் அதிகமாகிவிடும்.
பலரது வீடுகளில் எல்லோருமே ஒரே சீப்பு மற்றும் துண்டை பயன்படுத்துவார்கள். ஆனால் இப்படி செய்வது தவறு. அதுவும் குறிப்பாக பொடுகு தொல்லை இருப்பவர்கள் இப்படி செய்யவே கூடாது. உங்களுக்குகென தனி சிரிப்பு, துண்டு வைத்துக் கொள்வது தான் நல்லது.
56
இரவில் எண்ணெய் தேய்த்தல் :
பலரும் பகலில் தலைக்கு எண்ணெய் தேய்க்க நேரமில்லை என்று இரவு தேய்த்து விட்டு தூங்குவார்கள். ஆனால் இரவு எண்ணெய் தேய்க்க கூடாது. அப்போ எப்படி எண்ணெய் தேய்க்க வேண்டும் என்று கேட்டால், நீங்கள் தலைக்கு குளிப்பதற்கு சுமார் 1-2 மணி நேரத்திற்கு முன் எண்ணெய் தேய்க்கவும்.
66
மன அழுத்தம் :
பொடுகுக்கும் மன அழுத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இவை இரண்டிற்கும் தொடர்பு உண்டு. எப்படியெனில், மன அழுத்தம் அதிகமாக இருந்தால் சரியாக தூங்க மாட்டோம். தூக்கமின்மை பொடுகு பிரச்சனையை அதிகரிக்க செய்யும்.