Eyebrow Growth Tips : புருவம் அழகாகவும், அடர்த்தியாகவும் வளர! இதைக் கொஞ்சமா தடவுங்க போதும்!

Published : Nov 18, 2025, 05:05 PM IST

புருவம் அடர்த்தியாக வளர வீட்டிலேயே செய்யக்கூடிய சில சிம்பிளான டிப்ஸ்கள் இங்கே.

PREV
16
Eyebrow Growth Tips

பெண்களுக்கு புருவங்கள் வில் போல வளைந்து அடர்த்தியாக இருப்பது தான் அழகு. ஆனால் சிலரது புருவத்தின் முடி ரொம்பவே மெல்லியதாகவும், அடர்த்தி இல்லாமல் இருக்கும். புருவங்கள் அடர்த்தியாகவும், தடிமனாகவும் வளர பணம் ஏதும் செலவழிக்க தேவையில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிமையான வீட்டு வைத்தியங்களை மட்டும் பின்பற்றினால் போதும். புருவத்தின் முடி நன்கு அடர்த்தியாக வளரும்.

26
தேங்காய் எண்ணெய் :

பொதுவாக இது நம் எல்லோருடைய வீடுகளிலும் கண்டிப்பாக இருக்கும். தலைமுடி மட்டுமல்ல புருவத்தின் முடி வளர்வதற்கும் தேங்காய் எண்ணெய் உதவுகிறது. தினமும் இரவு தூங்கும் முன் புருவத்தின் தேங்காய் எண்ணெய் தடவி லேசாக மசாஜ் செய்து வந்தால் முடி கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பிக்கும்.

36
ஆலிவ் ஆயில் :

வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ ஆலிவ் ஆயிலில் நிறைந்துள்ளன. அவை புருவ முடி வளர்ச்சியை தூண்ட உதவும். இதற்கு ஆலிவ் ஆயிலை புருவத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் புருவத்தின் அடர்த்தியாகவும், வேகமாகவும் வளரும்.

46
விளக்கெண்ணெய் :

காலம் காலமாகவே தலைமுடி மற்றும் புருவத்தின் முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர விளக்கெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஒரு பட்ஸை விளக்கெண்ணெயில் தொட்டு புருவத்தின் மீது தினமும் இரவு தடவி வந்தால் புருவத்தின் முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.

56
வெங்காய சாறு :

வெங்காய சாறு தலைமுடி வேகமாக வளர்வதற்கு சிறப்பாக செயல்படும் என்று நாம் அறிந்ததே. எனவே வெங்காய சாற்றை புருவத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து விட்டு பிறகு வழக்கம் போல குளித்து வந்தால் புருவம் வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும்.

66
கற்றாழை ஜெல் :

கற்றாழை ஜெல்லானது தலைமுடி, உடல் ஆரோக்கியம், சருமம் என அனைத்திற்கும் இது நன்மை பயக்கும். இதைக் கொண்டு புருவத்தின் முடியை அடர்த்தியாக்கலாம். இதற்கு தினமும் இரவு தூங்கும் முன் கற்றாழை ஜெல்லை புருவத்தின் மீது தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் புருவ முடி வளர்ச்சியானது அதிகரிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories