குளிர்காலம் தொடங்கியாச்சு. இந்த சீசனில் வெயில் அதிகமாக இருக்காததால் பலர் சருமத்தை பராமரிக்காமல் அலட்சியமாக இருப்பர். ஆனால் குளிர்காலத்திலும் சருமத்தை பராமரிப்பது மிகவும் அவசியம். இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் உங்கள் முகம் எப்போதுமே அழகாகவும், பளபளப்பாகவு இருக்க வேண்டுமென்றால், காபி தூளில் ஃபேஸ் பேக் போடுங்கள். அது எப்படியென்று இப்போது இங்கு பார்க்கலாம்.
26
காபித்தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் :
1 ஸ்பூன் காபித்தூளுடன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து அந்த பேஸ்ட்டை உங்களது முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
36
காபி தூள் மற்றும் தேன் :
இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் காபித்தூளுடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலந்து அதை உங்களது முகத்தில் தடவி சுமத் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு, பிறகு குளிர்ந்து நீரால் முகத்தை கழுவ வேண்டும் வாரத்திற்கு 1-2 முறை இந்த ஃபேஸ் பேக் போட்டு வந்தால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கும், சரும சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் குறைந்து முகம் எப்போதுமே பொலிவாக இருக்கும்.
ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் காபித்தூளுடன் 1/2 ஸ்பூன் பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரத்திற்கு 2-3 முறை இப்படி போட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
56
காபி தூள் மற்றும் கடலை மாவு :
இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் காபித்தூளுடன் 1 ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். வாரத்திற்கு 1-2 முறை இந்த ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.
66
காபி தூள் மற்றும் தயிர் :
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் காபித்தூளுடன் 1 ஸ்பூன் தயிர் கலந்து அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை போட்டு வந்தால் நீங்களே எதிர்பார்க்காத மாற்றத்தை காண்பீர்கள்.