Teas For Skin And Hair : இந்த 'டீ' குடிச்சா ஒரே வாரத்தில் முகம் பொலிவாகும் தெரியுமா? உடலை பாதுகாக்கும் '5' டீ வகைகள்!!

Published : Nov 11, 2025, 03:42 PM IST

முகத்தைப் பளபளப்பாக்கும்; முடி வளரச் செய்யும் 5 டீ வகைகள்.. அதன் நன்மைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

PREV
16
Teas For Skin And Hair

பலர் அழகான முகத் தோற்றம், நீளமான கூந்தலுக்காக நிறைய செலவு செய்கிறார்கள். ஆனால் அதை நாம் அருந்தும் டீ மூலமே பெற முடியும். மூலிகை தேநீர் சுவை மட்டுமல்ல; பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. மூலிகை தேநீரில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. அவை உடலை உள்ளிருந்து பாதுகாக்கும். சருமம், முடி வளர்ச்சிக்கு உதவும்.

26
துளசி டீ!

துளசியை புனிதமாக கருதுவோம். அதில் பல மருத்துவ நன்மைகள் உள்ளன. சரும பொலிவு, கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. இரத்தத்தை சுத்திகரிக்கும். ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் அற்புத சக்தி கொண்டது. உடல் நச்சுக்களை வெளியேற்ற உதவும் அருமருந்து. துளசி டீயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. முகப்பரு, சரும வெடிப்புகளைத் தடுக்க உதவும். பொடுகைக் குறைத்து தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்தும். தினமும் ஒரு கப் துளசி தேநீர் சூடாக குடித்தால் சரும பொலிவு அடைவீர்கள்.

36
கெமோமில் டீ

தற்போது பிரபலமாகி வரும் கெமோமில் டீ உங்களுடைய டல்லான முகத்தை பிரகாசமாக்கும். மன அழுத்தத்தை குறைத்து மனதை இலகுவாக வைத்திருக்கும். இதனால் இயல்பாகவே முகம் பொலிவாக தோன்றும். கெமோமில் டீ நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தை தருகிறது. சரியான ஓய்வு எடுக்காமல் இருந்தால் ஏற்படும் வீக்கம், கருவளையங்களை நீக்க உதவுகிறது. இந்த டீயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் வயதாகும் நிகழ்வை தாமதப்படுத்த உதவுகிறது. இளமையான தோற்றம் பெறுவீர்கள். வாரம் ஒருமுறை குளிர்ந்த கெமோமில் தேநீரில் தலைமுடிக்கு மசாஜ் கொடுத்து கழுவலாம்.

46
பெப்பர்மிண்ட் டீ!

உங்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை, முகப்பருக்கள், எண்ணெய் பசை மாதிரி உச்சந்தலைப் பிரச்சினைகள் இருக்கும்பட்சத்தில் பெப்பர்மிண்ட் டீ சிறந்த தேர்வாக இருக்கும். இதனை குடிப்பதால் உடலை உள்ளிருந்து குளிர்ச்சியாக்கும். ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினைகளை தீர்க்கும். இதில் உள்ள மெந்தோல் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. சருமத்தை பராமரிக்க உதவும். இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதால் முடி அடர்த்தியாக வளரும். சாப்பிட்டபின் ஒரு கப் பெப்பர்மிண்ட் டீ குடித்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும். ஆரோக்கியமான குடல் உங்களுக்கு முகப்பொலிவை வழங்குகிறது.

56
கிரீன் டீ

வளர்சிதை மாற்றம் மேம்பட கிரீன் டீ உதவும். முடி உதிர்தல் நீங்க இந்த டீ நல்ல தேர்வு. இதில் உள்ள கேட்டசின்கள், பாலிபினால்கள் முகப்பருக்களை குறைத்து சருமத் துளைகளை நிரப்புகிறது. கிரீன் டீ தொடர்ந்து குடித்தால் வீக்கம், முடி உதிர்தல் குறையும். வாரம் ஒருதடவை கிரீன் டீயை ஆறவைத்து முகத்திற்கு டோனர் போல அல்லது ஷாம்புக்குப் பின் முடியில் மசாஜ் செய்து குளிக்கலாம்.

66
ரோஸ் டீ

காய்ந்த ரோஜா இதழ்களில் செய்யும் இந்த டீ சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்யை சமநிலைப்படுத்தும். சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவும். இதனால் வறண்ட சருமம் புத்துணர்வாகும். ரோஜா இதழ்களில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி சுருக்கங்களை குறைக்கும். ரோஜா டீயுடன் துளசி இலைகளைப் போட்டு டீ அருந்தினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

ஒருநாள் குடிப்பதால் இதன் நன்மைகளை பெற முடியாது. தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு கப் மூலிகை டீ, ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம் சரும பொலிவு, முடி வளர்ச்சிக்கு உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories