தலையில் பொடுகு இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை. இது அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும். சரியான பராமரிப்பின் மூலம் இதை சுலபமாக குணப்படுத்தி விடலாம். ஆனால், அலட்சியம் காட்டினால் முடி உதிர்தல் ஏற்படும். பொடுகை விரட்ட பல வகையான ஷாம்புகள் இருந்தாலும் அவை நிரந்தரமான தீர்வை தராது. இத்தகைய சூழ்நிலையில், பொடுகை நிரந்தரமாக விரட்ட பூண்டு சிறந்த தேர்வாக இருக்கும். ஆமாங்க, பூண்டில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை பொடுகை விரட்ட பெரிதும் உதவுகின்றது. ஆனால் பூண்டை நேரடியாக தலையில் பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சரி இப்போது இந்த பதிவில், பொடுகை நிரந்தரமாக விரட்ட அதை பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
25
பூண்டு எண்ணெய் மற்றும் அலிவ் எண்ணெய் :
இதற்கு ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் பூண்டு எண்ணெய் மற்றும் 5 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விரல்களால் தொட்டு உச்சந்தலையில் தடவி லேசாக மசாஜ் செய்து, பின் 20 நிமிடங்கள் கழித்து மைல்டு ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க வேண்டும். வாரத்திற்கு 2 முறை இப்படி செய்து வந்தால் பொடுகு நிரந்தரமாக நீங்கிவிடும்.
35
பூண்டு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் :
இதற்கு 2 ஸ்பூன் பூண்டு எண்ணெய், 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இரண்டையும் நன்றாக கலந்து லேசாக சூடாக்கி பிறகு உச்சம் தலையில் தடவி மசாஜ் செய்து, பின் 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் பூண்டு விழுது, 5 ஸ்பூன் கெட்டி தயிர் மற்றும் தேவைக்கேற்ப இளநீர் சேர்த்து நன்றாக கலந்து அதை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து மைல்டு ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க வேண்டும்.
55
பூண்டு மற்றும் கற்றாழை ஜெல் :
2 ஸ்பூன் பூண்டு சாறுடன், 4 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலந்து அதை உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இந்த மாஸ் பொடுகை நிரந்தரமாக நீக்குவது மட்டுமல்லாமல், கூந்தலை பளபளப்பாக மாற்ற உதவி செய்யும்.