தலைமுடி தொடர்பான பல பிரச்சனைகளில் ஒன்று பொடு தொல்லை. தலையில் பொடுகு அதிகமாக இருந்தால் முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். நீங்களும் பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், கிச்சனில் இருக்கும் ஒரு சில பொருட்களை கொண்டு ஹேர் மாஸ்காக போடுவதன் மூலம் பொடுகை மொத்தமாக நீக்கிவிடலாம். இந்த பதிவில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபட உதவும் அந்த ஹேர் மாஸ்க்குகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
26
எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் :
சூடான தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து அதை உச்சந்தலையில் தடவி சுமார் 10 நிமிடங்கள் மசாஜ் செய்து, பிறகு 30 நிமிடங்கள் ஊற வைத்துவிட்டு பின் மைல்டு ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க வேண்டும்.
36
விளக்கெண்ணெய் மற்றும் கொத்தமல்லி இலை :
கொத்தமல்லி இலையை நன்கு மையாக அரைத்து அதில் 3 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து அதை உங்களது உச்சந்தலையில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். வாரத்திற்கு 1 முறை இப்படி செய்து வந்தால் பொடுகு முற்றிலும் நீங்கிவிடும்.
தயிரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதை உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் அப்படியே ஊற வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். தயிர் உச்சந்தலையை சுத்தம் செய்யும். எலுமிச்சை சாறு உச்சந்தலையில் இருக்கும் பொடுகு மற்றும் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.
56
செம்பருத்தி மற்றும் வெந்தயம் :
1 ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு பிறகு அதை காலையில் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் 10 முதல் 12 செம்பருத்தி இலைகள் மற்றும் அரை கப் தயிர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுக்கவும். பிறகு அதை உங்களது உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு மைல்டு ஷாம்பு போட்டு குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
66
முட்டை மற்றும் தயிர் :
ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை ஊற்றி, அதனுடன் ஒரு கப் தயிர் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து பிறகு அதை உங்களது உச்சந்தலையில் நன்கு தலைவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு லேசான ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க வேண்டும்.