இதற்கு இரண்டு ஸ்பூன் கருப்பு எள் எண்ணெய், களிமண் விளக்கு, பருத்தி துணி மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது களிமண் விளக்கில் எள் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள் அடுத்து பருத்தி துணியை விளக்கு திரி போல உருட்டி அதை விளக்கில் வைத்து திரியை ஏற்றவும். பிறகு ஒரு பெரிய கிணத்தை கொண்டு விளக்கை மூடவும். சுடரிலிருந்து வரும் கருப்புப் புகையானது கிண்ணம் மீது பட்டு கரி குவியும். விளக்கு அணந்த பிறகு கிண்ணத்தில் படிந்திருக்கும் கரியை ஒரு தட்டில் வைக்கவும். பிறகு அதில் தேங்காய் எண்ணெய் கலந்து பேஸ்ட் போல் கலக்கவும். அவ்வளவுதான் சூப்பரான ஹேர் டை ரெடி.