பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க முடி பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், ரசாயன ஷாம்பூக்கள், ஊட்டச்சத்து குறைபாடு, பொடுகு போன்றவற்றால் முடி உதிர்வு ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை செம்பருத்தி பூவால் சரிசெய்யலாம்.
24
செம்பருத்தி ஹேர் பேக்...
பெண்களின் முடியை வலுப்படுத்தும் ஹேர் பேக் தயாரிக்க செம்பருத்தி பூக்களும் இலைகளும் பெரிதும் உதவுகின்றன. இவை முடியின் வேர்களை வலுவாக்கி, முடி உதிர்வைக் குறைக்கின்றன.
தயாரித்து வைத்த கலவையை முடியின் உச்சி முதல் நுனி வரை தடவி சுமார் அரை மணி நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் குளிக்க வேண்டும். இந்த ஹேர் பேக்கானது முடிக்கு ஊட்டமளித்து முடி உதிர்வை கட்டுப்படுத்தி, முடிக்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும். மேலும் முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.