நம் ஒவ்வொருவருடைய சருமமும் வெவ்வேறு வகைப்படும். அதற்கேற்றார் போல நாம் சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் சருமம் சேதமடையத் தொடங்கும். அதிலும் நம்முடைய முகம் ரொம்பவே முக்கியமானது. ஏனெனில், முகத்தின் தோல் மிகவும் மென்மையாக இருக்கும். இதனால் முகத்தில் தவறான பொருட்களை ஏதேனும் பயன்படுத்தினால் முகத்தில் தடிப்புகள், பருக்கள், ஒவ்வாமை, நிரமி போன்று பிரச்சனைகள் வர தொடங்கும். ஆகையால் முகத்தில் ஏதேனும் பயன்படுத்துவதற்கு முன் பயன்படுத்துவது நல்லது. இத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் நீங்கள் சில பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அவை என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.