பொதுவாக காபி நம்முடைய மனதை புத்துணர்ச்சியாக வைக்க உதவும். அதுபோல நம்முடைய முகத்தையும் புத்துணர்ச்சியாக்கும் தெரியுமா? ஆம், காபி தூள் கொண்டு போடப்படும் ஃபேஸ் பேக் பல சரும பிரச்சினைகளை போக்க உதவுகிறது. அதாவது நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு காபி ஃபேஸ் பேக் உங்களது சருமத்திற்கு நன்மைகளை செய்யும். இந்த பதிவில் என்னென்ன சரும பிரச்சனைகளுக்கு காபி ஃபேஸ் பேக் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
26
முகப்பருக்களை நீக்க :
இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு 1 ஸ்பூன் காபி தூளில் 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/4 ஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் தடவி, சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும். வாரத்திற்கு 2 முறை இந்த ஃபேஸ் பேக் போட்டு வந்தால் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
36
சருமத்தின் கருமையை போக்க :
இதற்கு ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் காபி தூள் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவின் 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு 2 முறை போடுங்கள். சருமத்தின் கருமை நீங்கி முகம் பொலிவாக மாறும்.
ஒரு கிண்ணத்தில் 1/2 ஸ்பூன் காபி பவுடர், 1/2 ஸ்பூன் கொக்கோ பவுடர், 1 ஸ்பூன் பால், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் ஆகியவற்றை நான்கு கலந்து முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரை முகத்தை கழுவும். வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கருமினத் தழும்புகள் மறையும்.
56
முகத்தை பொலிவாக
ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் காபி பவுடருடன், 1 1/2 ஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்திடும் முகத்தை கழுவவும். வாரத்திற்கு 2 முறை இந்த ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகம் எப்போதுமே பொதுவாக இருக்கும்.
66
சரும சுருக்கதை நீக்கும் :
ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் காபி பவுடர், 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீர் முகத்தை கழுவும். முகத்தை கழுவும் போது 2-3 நிமிடங்கள் முகத்தை மசாஜ் செய்ய மறக்காதீர்கள். வாரத்திற்கு 2-3 முறை இப்படி போட்டு வந்தால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும்.