தீபாவளி பண்டிகை வர இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நாளில் உங்களது முகம் தகதகன்னு மின்ன வேண்டுமா? அப்படியானால், உங்களது முகம் ஜொலிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில பேஸ் பேக்குகளை இன்றிலிருந்து போட ஆரம்பிங்கள். உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்குவது மட்டுமல்லாமல் சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. சரி இப்போது அது என்னென்ன ஃபேஸ் பேக்குகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
26
கடலை மாவு மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் :
மஞ்சள் மற்றும் கடலை மாவு இவை இரண்டுமே காலம் காலமாக சரும அழகு மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வீட்டை கொஞ்சம் ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் கடலை மாவில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல தயாரித்து அதை உங்களது முகம் மற்றும் கழித்து பகுதிகளில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிந்த நேரில் முகத்தை கழுவவும். வாரத்திற்கு 2 முறை இந்த ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகம் தகதகன்னு மின்னும்.
36
எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஃபேஸ் பேக் :
எலுமிச்சை மற்றும் தேன் இவை இரண்டுமே சருமத்தின் நிறத்தை மாற்றும் மற்றும் சருமத்தை பட்டு போல மென்மையாக மாற்ற உதவுகிறது. இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் தேனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து அதை உங்களது முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை போட்டு வந்தால் சருமத்தின் கருமை நீங்கும்.
இந்த பேஸ்புக் தயாரிப்பதற்கு ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் அரிசி 1/2 ஸ்பூன் சந்தனம் பொடி மற்றும் 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து அந்த பேஸ்ட்டை உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 10 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இந்த பேஸ் பேக்கை வரத்திற்கு 1 முறை போட்டால் போதும். முகம் பிரகாசமாக ஜொலி ஜொலிக்கும்.
56
காய்ச்சாத பால் மற்றும் தேன் ஃபேஸ் பேக் :
இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் காய்ச்சாத பாலில் 1 ஸ்பூன் தேன் கலந்து அதை உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் கூட பயன்படுத்தலாம். முகம் எப்போதுமே பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
66
சந்தனம் மற்றும் தேன் ஃபேஸ் பேக் :
சந்தனம் சருமத்தை நிறத்தை அதிகரிக்கும். தேன் சருமத்தை மென்மையாக்கும். இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன், 1 ஸ்பூன் தேன் மற்றும் 2-3 துளிகள் சந்தன என்னை சேர்த்து நன்கு கலந்து அதை உங்களது முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும் வாரத்திற்கு இரண்டு எது மூன்று முறை இந்த ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகம் பளபளக்கும்.