Glowing Skin Tips : வெறும் 10 நிமிடங்கள் போதும்!! முகத்தை ஜொலிக்க வைக்கும் மேஜிக் டிப்ஸ்

Published : Oct 08, 2025, 05:16 PM IST

உங்களது முகம் எப்போதுமே டல்லாக இருக்கிறது என்றால், உடனே ஜொலிக்க வைக்க ஒரு சூப்பரான டிப்ஸ் குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
15
Glowing Skin Tips

என்னதான் முகத்திற்கு மேக்கப் போட்டாலும் முகம் பொலிவாக இல்லனு ஃபீல் பண்றீங்களா? வெயில், மன அழுத்தம் மற்றும் மாசுபாடு தான் சருமத்தின் இயற்கையான பளபளப்பை இழக்க செய்கிறது. முகத்தை பொலிவாக நீங்கள் பார்லருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. நம் வீட்டில் இருக்கும் தக்காளி மற்றும் பப்பாளியை கொண்டு முகத்தை பொலிவாக்கலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாங்க, இந்த இரண்டையும் கொண்டு செய்யப்படும் ஐஸ் கியூப் மசாஜ் முகத்திற்கு புத்துயிர் அளிப்பது மட்டுமல்லாமல், உடனடி பொலிவையும் தரும். அவற்றை பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

25
சருமத்திற்கு தக்காளி நன்மைகள் :

தக்காளியில் இருக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்சிடன்ட் சருமத்தை சூரிய கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ சருமத்தில் இருக்கும் தழும்புகள், கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை குறைத்து, சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது.

35
சருமத்திற்கு பப்பாளி நன்மைகள் :

பாப்பாளில் இருக்கும் பைப்பேன் என்னும் என்னும் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மற்ற உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சருமத்தின் நிறத்தை சீராக்காவும், தெளிவாகவும் மாற்றுகிறது.

எனவே, தக்காளி மற்றும் பப்பாளி இந்த இரண்டு பொருட்களிலும் சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. ஆகவே, எந்தவித சந்தேகமுமின்றி இவற்றை தாராளமாக பயன்படுத்தலாம்.

45
ஐஸ் கியூப் தயாரிக்கும் முறை :

தக்காளி ஐஸ் கியூப் - ஒரு பழுத்த தக்காளியை மிக்ஸியில் நன்கு அரைத்து அதை வடிகட்டி, அந்த சாற்றை ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். அவ்வளவுதான் தக்காளி ஐஸ் கியூப் ரெடி.

பப்பாளி ஐஸ் கியூப் - நன்கு பழுத்த பப்பாளியை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி அதை மிக்ஸியில் போட்டு அரைத்து, அதிலிருந்து சாற்றை மற்றும் தனியாக எடுத்து அதை ஐஸ் ட்ரேயில் ஊற்றி வைத்தால் போதும். பப்பாளி ஐஸ் கட்டி தயார்.

55
எப்படி பயன்படுத்தனும்?

முதலில் உங்களது முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுகு பிறகு தயாரித்து வைத்த தக்காளி அல்லது பப்பாளி ஐஸ் கியூபில் ஒன்றை எடுத்து ஒரு மெல்லியத் துணியில் வைத்து, பிறகு முகத்தில் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். கண், நெற்றி, உதடு, கழுத்து பகுதியில் தடவும் போது கொஞ்சம் கவனம் தேவை. ஐஸ்கட்டி நன்கு கரையும் வரை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பத்து நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். தினமும் ஒரு முறை இப்படி செய்து வந்தால் உங்களது முகம் எப்போதுமே பொலிவாக இருக்கும். இந்த டிப்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

Read more Photos on
click me!

Recommended Stories