Winter Hair Care : குளிர்காலத்துல கொத்து கொத்தா முடி கொட்டுதா? தடுக்க வாரத்தில் 3 முறை இதை செய்ங்க

Published : Nov 21, 2025, 06:23 PM IST

குளிர்காலத்தில் முடி கொட்டுவதை தவிர்க்க பின்பற்ற வேண்டிய சில கூந்தல் பராமரிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
Winter Hair Care

குளிர்காலம் வந்துவிட்டது. இந்த சீசனில் தலை முடி அதிகமாகவே உதிர ஆரம்பிக்கும். இது தவிர உச்சந்தலையில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியாக்கிடும். எனவே, இந்த பிரச்சனையை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும். அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

26
எண்ணெய் மசாஜ் :

நீங்கள் தலைமுடிக்கு பயன்படுத்தும் எண்ணெயை லேசாக சூடாக்கி அதை உச்சந்தலையில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும் .இப்படி செய்வதன் மூலம் உச்சந்தலையில் ரத்த ஓட்டம் மேம்படும் மற்றும் முடியின் வேர்க்கால்கள் பலப்படும். மேலும் உச்சந்தலையில் வறட்சி, அரிப்பு குறையும். வாரத்திற்கு மூன்று நாட்கள் கண்டிப்பாக தலைமுடிக்கு எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலைமுடி உதிர்ந்து, முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

36
தலைக்கு குளித்தல் :

சிலர் தலைமுடிக்கு தினமும் குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் வாரத்திற்கு 2-3 முறை மட்டும் குளித்தால் போதும். அதுவும் குளிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உச்சந்தலை வறண்டு போவது தடுக்கப்படும். அதுபோல உச்சந்தலைக்கு ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்துவது நல்லது.

46
ஆரோக்கியமான உணவுகள் :

கூந்தல் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ரொம்பவே முக்கியம். இதற்காக பாதாம், வால்நட், முட்டை, முந்திரி, கீரை, கேரட், மீன் போன்ற சத்தான உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். இவை அனைத்தும் உங்களது தலைமுடியை உள்ளிருந்து வலுப்படுத்த உதவும்.

56
வைட்டமின் டி :

தினமும் காலையில் குறைந்தது 15 நிமிடங்கள் ஆவது சூரிய ஒளியில் இருங்கள். இதன் மூலம் வைட்டமின் டி கிடைக்கும். வைட்டமின் டி முடி உதிர்வதைக் குறைத்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும்.

66
தண்ணீர் குடியுங்கள் :

ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியம். எனவே ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். வெறும் தண்ணீர் மட்டுமல்ல தேங்காய் தண்ணீர், எலுமிச்சை சாறு போன்ற ஆரோக்கியமான பானங்களையும் குடிக்கலாம்.

இந்த குளிர்காலத்தில் மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் முடி உதிர்தல் குறையும். கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories