கோடைகாலத்தில் வெந்நீர் குடிக்கலாமா? பாதிப்பு ஏற்படுமா?

Published : Mar 27, 2025, 08:03 PM ISTUpdated : Mar 27, 2025, 08:04 PM IST

கோடை காலத்தில் வெந்நீர் குடிக்கலாமா? அது உடல் நலத்திற்கு நல்லதா? இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

PREV
16
கோடைகாலத்தில் வெந்நீர் குடிக்கலாமா? பாதிப்பு ஏற்படுமா?

Is it Safe to Drink Hot Water in Summer? கோடை காலம் தொடங்கியாச்சு. வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கிறது. எனவே வெளியில் செல்லும்போது ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும்.. இத்தகைய சூழ்நிலையில் எந்த பருவ காலம் ஆனாலும் சரி தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

26

பொதுவாக குளிர்காலத்தில் பெரும்பாலானோர் சூடான நீர் தான் குடிப்பார்கள். ஆனால் சிலரோ குளிர்காலம் மட்டுமின்றி கோடை காலத்திலும், கோடையிலும் வெந்நீர் குடிப்பார்கள்.. அப்படி கோடையில் வெந்நீர் குடிக்கலாமா? அதனால் உடல் நலத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  சூடாக தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமா? குறையாதா?

36
கோடை காலத்தில் வெந்நீர் குடிக்கலாமா?

ஆம்,  கோடை காலத்தில் வெந்நீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். அதனால் கிடைக்கும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

செரிமானத்திற்கு உதவும் : கோடைகாலத்தில் வெந்நீர் குடிப்பது உங்களது செரிமான அமைப்பையும், மானத்தையும் மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கப்படும். சூடான நீர் குடிப்பதன் மூலம் உணவானது உடைந்து, ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகின்றது.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்: கோடையில் சூடான நீர் குடிப்பதன் மூலம் உங்களது வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும். இதனால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்படும்.  இதன் விளைவாக எடையை சுலபமாக குறைத்து விடலாம்.

46

வாயு பிரச்சனை மற்றும் வயிறு உப்புசம் : கோடகாலத்தில் ஏற்படும் வாயு பிரச்சனை மற்றும் வயிறு உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்ய சூடான நீர் பெரிதும் உதவுகின்றது. சூடான நீர் குடிப்பதன் மூலம் தசைகளை தளர்த்த உதவும். இதனால் செரிமான அமைப்பு வழியாக உணவின் இயக்கம் ஊக்குவிக்கப்படும்.

இரத்த ஓட்டம் மேம்படும்: கோடை காலத்தில் வெந்நீர் குடித்தால் ரத்த ஓட்டம் மேம்படும். ஆம், வெந்நீர்  உங்களது செல்களுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கும். இதனால் உடல் சோர்வு நீக்கி, உங்களது ஒட்டுமொத்த ஆற்றல் மட்டங்களையும் மேம்படுத்தும்.

56

உடலை நீரேற்றமாக வைக்கும் : நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி அதுதான் உண்மை. ஆம், கோடை காலத்தில் சூடான நீர் குடித்தால் உங்களது உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கும். தண்ணீரின் வெப்பம் உங்களுக்கு அதிகப்படியாக வியக்க உதவும். இதனால் உங்களது உடல் வெப்பநிலை சீராக இருக்கும் மற்றும் நீர் இழப்பை தடுக்கும்.

சருமத்தை சுத்தம் செய்யும் : வெயில் காலத்தில் வெந்நீர் குடிப்பது உங்களது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, உங்களது சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதுபோல சூடான நீர் வீக்கத்தை குறைக்கவும், தெளிவான நிறத்தை ஊக்குவிக்கவும் உதவும்.

66
கோடை காலத்தில் சூடான நீர் எப்போது குடிக்க வேண்டும்?

கோடை காலத்தில் வெந்நீர் குடிக்க நீங்கள் விரும்பினால் அது குடிப்பதற்கான சரியான நேரத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஆம், காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் சூடான நீர் குடிப்பதன் மூலம் உங்களது நாளை தொடங்குங்கள். அதுபோல உணவுக்கு இடையில் வெந்நீர் குடிக்கலாம். கூடுதல் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக சூடான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ஒரு துண்டு இஞ்சி சேர்க்கலாம். இவை உங்களது ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.  

இதையும் படிங்க:  வெந்நீரில் 1 ஸ்பூன் நெய்; வெறும் வயித்துல குடித்தால் என்னாகும் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories