கர்ப்பிணியின் முகம் பிரகாசமாக இருந்தால் கட்டாயம் பெண் குழந்தை தான் பிறக்குமா? உண்மை பின்னணி என்ன?

First Published | Jan 31, 2023, 11:12 AM IST


கருவுற்ற பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது. இதில் சில மாற்றங்கள் அவளின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டுள்ளது. 

கருவுற்ற பெண்களுக்கு தங்களுடைய வயிறு வளரும்போது தங்களுடைய குழந்தைகளும் உடன் வளர்கிறார்கள் என்ற ஆனந்தம் இருக்கும். குழந்தைகளின் அசைவை உள்ளூர உணரும் கணத்தை எந்த வார்த்தைகளால் தான் வர்ணிக்க முடியும். இந்த சமயங்களில் அதாவது கர்ப்பக்காலத்தில் கர்ப்பிணிகளுக்கு பலர் அறிவுரைகளை வழங்குவர். அதில் சில அறிவுரைகள் அனுபவப்பூர்வமானதாக இருக்கும். சிலவை வெறும் செவி வழிக்கதைகளாக இருக்கும். எல்லாவற்றையும் நம்பிவிட முடியாது. நாம் இங்கு கர்ப்பத்தைப் பற்றிய கட்டுக்கதைகளையும், உண்மைகளையும் கொஞ்சம் அறிந்து கொள்ளலாம். 

குழந்தை ஆணா? பெண்ணா?

கர்ப்பக் காலத்தில் பெண்களின் வயிறு இருக்கும் வடிவத்தைக் கொண்டே சிலர், குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று கூறுகின்றனர்.  ஆனால் உண்மையில் குழந்தையின் பாலினத்தை வயிற்றைப் பார்த்து தீர்மானிக்க முடியாது. குழந்தை இருக்கும் நிலைதான் நமக்கு வடிவமாக தெரிகிறதே தவிர, பாலின வேறுபாட்டால் வடிவங்கள் மாறுவதில்லை. 

Tap to resize

கர்ப்பிணியின் முகம் பிரகாசமாக இருந்தால் பெண் குழந்தையா? கர்ப்பிணியின் பளபளப்பான முகத்தைப் பார்த்தாலே குழந்தையின் பாலினத்தை கண்டறியலாம் என்கிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, இது முற்றிலும் பொய். கர்ப்பக் காலத்தில் உண்ணும் ஆரோக்கியமான உணவினால் பெண்களின் முகம் பொலிவுறும்.  அது பிறக்கும் குழந்தை பெண்ணா அல்லது ஆணா என்பதை தீர்மானிக்கும் காரணியில்லை. 
 

காலையில் ஏற்படும் பலவீனம்

பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் சுகவீனம் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். காலையில் எழுந்தவுடன் தலை சுற்றுவதும், உணவின் வாசனை வந்தவுடன் குமட்டல், வாந்தியும் ஏற்படும். இப்படி மார்னிங் சிக்னஸால் அவதிப்படும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைக்காது என்பது தவறான புரிதல். இது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பொதுவாக ஏற்படும் பிரச்சனை என மருத்துவர்கள் நம்புகிறார்கள். 

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராயின் அசரடிக்கும் அழகின் சீக்ரெட் என்ன? இவ்வளவு பணம் இருந்தும் சிம்பிளா அவர் செய்யும் காரியம்..

உடற்பயிற்சியால் குழந்தைக்கு பாதிப்பா?

கர்ப்பக் காலத்தில் உடற்பயிற்சி குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் என்று சிலர் கூறுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது முற்றிலும் தவறானது. கருவுற்றிருக்கும் காலத்தில் மிதமான உடற்பயிற்சி செய்வது பெண்களுக்கு நன்மை பயக்கும். இதனால் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு உருவாகும். 

Image: Getty Images

கர்ப்பக்காலத்தில் காபி

கர்ப்பக் காலத்தில் நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியம். காபின் பானங்களை கர்ப்பிணிகள் அதிகம் குடிப்பது தீங்கு விளைவிக்கும். கர்ப்பிணிகள் கொஞ்சமாக காபியை குடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. ஒரு நாளைக்கு மூன்று கப் டீ அல்லது காபிக்கு மேல் அருந்தக் கூடாது. 

கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம் கருதி கர்ப்பிணிகள் ஏற்கனவே கவனமாக இருக்கும் சூழலில், தேவையில்லாத கட்டுக்கதைகளை அவர்களிடம் கூறுவது குழப்பத்தை உண்டாக்கும். ஆரோக்கியமான உணவுகளுக்கும், சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்க.. கர்ப்பிணிகளே! 

இதையும் படிங்க: இளமை ததும்ப ததும்ப தலைகீழாக நிற்கும் நடிகை ஷில்பா ஷெட்டி.. பிட்னஸுக்கு இது தான் காரணமாம்.. வைரல் வீடியோ..

Latest Videos

click me!