தாம்பத்தியத்தில் ஆர்வம் இல்லாத பெண்கள்... உடலுறவுக்கு முன் ஒரு பச்சை முட்டையை குடித்தால் என்னாகும் தெரியுமா?

First Published | Jan 30, 2023, 6:24 PM IST

தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைந்த பெண்கள் உண்ண வேண்டிய சில உணவுகள் குறித்து இங்கு காணலாம். 

கணவனுக்கு மட்டுமில்லை மனைவிக்கும் உடலுறவில் ஆர்வம் இருந்தால் தான் தாம்பத்தியம் சிறக்கும். திடீரென சில பெண்களுக்கு பாலியல் உறவில் நாட்டம் இல்லாமல் போகலாம். அதற்கு உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் ஆகியவை காரணமாக இருக்கும். சில உணவுகளை உண்பதன் மூலம் உங்களுடைய பாலியல் மனநிலையை மேம்படுத்தலாம். 

ப்ரோக்கோலி 

இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனை பச்சையாகவோ, சமைத்தோ உண்ணலாம். ப்ரோக்கோலி உண்பதால் பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களுக்கும் பாலியல் உறவு மேம்படும். இதில் உள்ள வைட்டமின் சி உறுப்புகளுக்கு இரத்தம் சீராக செல்ல உதவுகிறது. 


கிராம்பு 

இந்த மூலிகை பொருள் ஆண்களின் பாலியல் செயலிழப்பை சீராக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பெண்களுக்கும் நல்லது. கிராம்பு துர்நாற்றத்திற்கு சிகிச்சையளிக்கவும் பயன்படும். அதனால் இதழ் முத்தமிட ஆர்வம் அதிகமாகும். பாலுணர்வை அதிகரிக்க,உங்களுடைய உணவில் கொஞ்சம் கிராம்பு பொடியை தூவிக் கொள்ளலாம். 

அத்திப்பழம் 

உங்கள் காதலரை கூடுதலாக காதலிக்கவும், காமுறவும் விரும்பினால் அத்திப்பழம் நல்ல தேர்வு. இது சிறந்த கருவுறுதல் ஊக்கியாக கருதப்படுகின்றன. அதாவது கருவுறத் தூண்டும். இதை உண்பதால் பெண்களுக்கு பாலியல் ஆசை அதிகரிக்கும். அதற்கு காரணம் அத்தி பழத்தில் அதிக அளவு அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. இவை ஆண்களின் பாலியல் சகிப்புத்தன்மையையும் அதிகரிக்கும். 

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராயின் அசரடிக்கும் அழகின் சீக்ரெட் என்ன? இவ்வளவு பணம் இருந்தும் சிம்பிளா அவர் செய்யும் காரியம்..

முட்டை 

முட்டையில் பி5, பி6 ஆகியவை உள்ளன. இது ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவும். மன அழுத்தத்தைக் குறைக்கும். இதனால் பாலியல் ஆர்வம் அதிகமாகும். முட்டையை சமைக்காமல், பச்சையாக உடலுறவுக்கு முன் குடித்தால் பாலுணர்வு அதிகமாவதோடு அதிக ஆற்றலும் கிடைக்குமாம். 

குங்குமப்பூ 

பெண்களின் பாலியல் ஆர்வத்தைத் தூண்டும் உணவுகளில் குங்குமப்பூ தவிர்க்கமுடியாதது. இது பெண்களின் உணர்ச்சி உறுப்புகளுக்கு மட்டுமல்ல, வயிற்றுக்கும் ஏற்றது. இதை அதிகமாக செலவு செய்து வாங்கினாலும், இரவில் பாலியல் வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. குங்குமப்பூ பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனை கொதிக்கும் பால் அல்லது தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைத்து அருந்தலாம். உறவுக்கு செல்லும் 15 நிமிடங்களுக்கு முன் அருந்த வேண்டும். நல்ல பலன் கிடைக்கும். 

இதையும் படிங்க: செம்பு பாத்திரம் புதுசு மாதிரி மின்னனுமா? எலுமிச்சையுடன் இந்த பொருளை சேர்த்து தேய்த்தால் போதும்..

Latest Videos

click me!