புற்றுநோய் வந்த பின்னர் நீண்ட நாள் வாழ்வது தொடர்பான மாதவிடாய் நின்ற பெண்களின் வாழ்க்கை முறையை, உடல் செயல்பாடுகள், நடத்தைகள் மூலம் தெரிந்து கொள்ள இந்த ஆய்வு உதவுகிறது. இந்த ஆய்வில் மார்பகம், எண்டோமெட்ரியல், பெருங்குடல், நுரையீரல், சிறுநீர்ப்பை, மலக்குடல், கருப்பை, சிறுநீரகம் ஆகிய புற்றுநோய்கள் பாதிப்புள்ள 63 முதல் 99 வயதுக்குட்பட்ட 2,500 பெண்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் மாதவிடாய் நின்ற பெண்களாவர். இந்த ஆய்வில் 8 ஆண்டுகளாக அவர்களின் உடற்செயல்பாட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இவர்கள் தினமும் மிதமான முதல் தீவிரமான உடல் செயல்பாடுகள் குறைந்தது 1 மணிநேரமாவது செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். இதனால் இறப்பு அபாயம் 40%, இதய நோய் இறப்பு அபாயம் 60% குறைந்தது.