பிரசவமான பின் தலைமுடி ஏன் அதிகமா உதிர்கிறது? தடுக்க சிம்பிள் டிப்ஸ்

Published : Mar 11, 2025, 02:03 PM IST

பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் முடி உதிர்வுக்கான காரணங்கள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

PREV
16
பிரசவமான பின் தலைமுடி ஏன் அதிகமா உதிர்கிறது? தடுக்க சிம்பிள் டிப்ஸ்

Ways to Stop Hair Fall After Delivery : ஒரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மகிழ்ச்சி எதுவென்றால் அது தாயாக மாறுவதுதான். ஆனால், ஒரு குழந்தையை உலகத்திற்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கர்ப்ப காலத்தில் பெண்கள் பல வகையான உடல் மற்றும் மனப் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். அவற்றில் ஒன்றுதான் முடி உதிர்தல். பிரசவத்திற்கு பிறகு முடி உதிர்தல் என்பது பல பெண்கள் கர்ப்ப காலத்திற்கு பிறகு எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். கர்ப்பத்திற்கு முன் கர்ப்ப காலத்தில் மற்றும் கர்ப்பத்திற்கு பிறகு உள்ள ஹார்மோன் மாற்றங்கள் தான் பெண்களின் தலைமுடி வளர்ச்சியை குழப்பக்கூடும். இதன் காரணமாக தான் முடி உதிர்தல் ஏற்படுகிறது. பிரசவத்திற்கு பிறகு ஹார்மோன் சமநிலை இன்மை ஏற்படுவது முற்றிலும் இயல்பானது அவற்றின் அறிகுறிகளில் ஒன்று தான் பிரசவத்திற்கு பிறகு முடி உதிர்தல் ஆகும். 

26
பிரசவத்திற்கு பிறகு முடி உதிர்தலுக்கான காரணங்கள்:

பிறகு ஏற்படும் முடி உதிர்தல் தற்காலிகமானது மற்றும் ஆறு முதல் 12 மாதங்களுக்குள் முடி உதிர்தல் குறைந்துவிடும். இது தவிர சோர்வு, மன அழுத்தம், மோசமான உணவு முறை மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனையும் பிரசவத்திற்கு பிறகு முடி உதிர்தலை ஏற்படுத்தும்.

36
பிரசவத்திற்கு பிறகு முடி உதிர்வதை தடுப்பது எப்படி?

1. ஆரோக்கியமான உணவு முறை : உங்களது உணவில் இரும்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு பச்சை இலை காய்கறிகள் பழங்கள், பால், தயிர், முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை சாப்பிடுங்கள்.

2. போதுமான அளவு தண்ணீர் : ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உங்களது உடலை நீரேற்றமாக வைக்க உதவும் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

46
பிரசவத்திற்கு பிறகு முடி உதிர்வது

3. மன அழுத்தம் : யோகா, தியானம் அல்லது ஏதேனும் சிறிய உடற்பயிற்சி போன்றவை பின்பற்றுவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும். மன அழுத்தம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இதனால் முடி உதிர்தல் அதிகரிக்கும்.

4. முடி பராமரிப்பு : தலைக்கு குளிக்கும்போது முடியை அழுத்தம் கொடுத்து தேய்க்கக் கூடாது, மெதுவாக தான் தேய்க்க வேண்டும். முடி ஈரமாக இருக்கும்போது ஒருபோதும் சீவ வேண்டாம். முடிவுக்கு சல்பேட் இல்லாத ஷாம்பு மட்டும் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க:  முடி உதிர இப்படியும் ஒரு காரணமா? இளம் வயதினரே நோட் பண்ணுங்க!

56
பிரசவத்திற்கு பிறகு முடி உதிர்வது

5. முடிக்கு மசாஜ் : தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு உங்களது உச்சம் தலையை தவறாமல் மசாஜ் செய்ய வேண்டும். இது முடிவேர்களை வழிபடுத்தி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.

6. நல்ல தூக்கம் அவசியம் : முடி ஆரோக்கியமாக இருக்க நல்ல தூக்கம் மிகவும் அவசியம். தூக்கமின்மை ஹார்மோன் ஏற்றுதல் ஏற்படுத்தும் இதனால் முடி உதிர்தல் அதிகரிக்கும். 

இதையும் படிங்க:  உப்பு தண்ணில தலைக்கு குளிச்சா முடி உதிருமா? பலரும் செய்ற தவறான செயல்

66
பிரசவத்திற்கு பிறகு முடி உதிர்வது

7. முடியின் முனையில் பிளவுகள் : முடியின் முனையில் பிளவுகள் வந்தால் அவற்றை வெட்டுவதன் மூலம் முடி உதிர்தலை குறைக்கலாம். இல்லையெனில் அவை முடி உதிர்தலை ஏற்படுத்தும்.

8. மருத்துவரை அணுகவும் : உங்களுக்கு முடி உதிர்தல் அதிகமாக இருந்தால் கண்டிப்பாக ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று, அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories