Multani Mitti vs Sandalwood Powder for Dry Skin : பல நூற்றாண்டுகளாகவே முல்தானி மிட்டி மற்றும் சந்தனம் முக அழகை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சிலர் சந்தன பொடியை முகத்திற்கு ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் முல்தானி மிட்டியை ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவார்கள். ஆனால், இவை இரண்டுமே முக அழகை மேம்படுத்த உதவுகின்றன. முல்தானி மிட்டி மற்றும் சந்தனம் இவை இரண்டும் சருமத்தொடர்மான பிரச்சினைகளில் இருந்து நமக்கு நிவாரணம் அளிக்கும். குறிப்பாக இவை இரண்டும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு முல்தானி மிட்டி மற்றும் சந்தனம் இவை இரண்டில் எந்த ஃபேஸ் பேக் சிறந்தது என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
24
முல்தானி மிட்டி அல்லது சந்தனம் : வறண்ட சருமத்திற்கு எது பெஸ்ட்?
பொதுவாக எண்ணெய் சரும உள்ளவர்களுக்கு முல்தானி மிட்டி மற்றும் சந்தனம் இவை இரண்டுமே ரொம்பவே நல்லது. ஏனெனில் இவை முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிவிடும். ஆனால் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு சந்தனத்தை விட முல்தானி மிட்டி ஃபேஸ் பேக் தான் சிறந்தது என்று சொல்லப்படுகிறது. ஆம், முல்தானி மிட்டி ஃபேஸ் பேக் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் வாரத்திற்கு 1-2 முறை முல்தானி மிட்டி ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம்.
வறண்ட சருமம் இருந்தால் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் போட முல்தானி மிட்டியுடன் பால், தயிர், தேன் ஆகியவற்றை பயன்படுத்தலாம். ஏனெனில் இவற்றில் ஈரப்பதமூட்டும் பண்புகளை உள்ளதால், சருமத்தை ஈரப்பதமாக உதவும். இது தவிர முல்தானி மிட்டியில் பப்பாளி கூழ் அல்லது வாழைப்பழக்கூழ் கூட பயன்படுத்தலாம். இவையும் வறண்ட சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.