How To Remove Darkness From Elbows And Knees : நம்மில் பெரும்பாலானோர் முகத்திற்கு மட்டும் தான் அதிக கவனம் செலுத்துவோம். அதாவது முகம் பார்ப்பதற்கு கலராக, பளபளப்பாக இருக்க நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்வோம். ஆனால் பல முழங்கால் மற்றும் கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் அந்த பகுதி ரொம்பவே கருப்பாக இருக்கும். இதன் காரணமாக குட்டையான மற்றும் கட்ஸ் லீவ் ஆடைகள் அணிவதை தவிர்ப்போம். இத்தகைய சூழ்நிலையில் உங்களது முழங்கை, மூட்டுகளில் கருப்பாக இருக்கிறது என்றால், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அவற்றை சுலபமாக நீக்கிவிடலாம். அவை என்னென்ன என்பதை பற்றி இப்போது இங்கு பார்க்கலாம்.
25
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, சருமத்தை பொலிவாகும். முழங்கால், கைகளில் இருக்கும் கருமை போக்க கடுகு எண்ணெய் லேசாக சூடுப்படுத்தி அதை உங்களது கை, கால்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இரவு தூங்கு முன் இப்படி செய்துவிட்டு பிறகு மறுநாள் காலை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் அல்லது கழுவ வேண்டும். மற்றொரு குறிப்பு என்னவென்றால் , கடுகை பொடியாக்கி அதனுடன் சிறிதளவு பசும்பால் சேர்த்து நன்கு குழைத்து அதை கை, கால் மூட்டுகளில் தடவி ஸ்க்ரப் போல் தேய்க்க வேண்டும். இதைத்தொடர்ந்து செய்து வந்தால் ஒரு வாரத்திலேயே நல்ல பலன்களை காண்பீர்கள்.
35
கற்றாழை
கற்றாழையின் பயனை அறிந்து பலரும் தங்களது வீடுகளில் வளர்க்க தொடங்கி விட்டார்கள். கை, கால் மூட்டுகளில் இருக்கும் கருமையை போக்க கற்றாழை ஜெல்லை உங்களது கை, கால்களில் தேய்த்து வந்தால் கருமை கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கும்.
எலுமிச்சையில் இருக்கும் அமிலம் சருமத்தில் இருக்கும் இறந்து செல்களை நீக்க உதவும். எனவே உங்களது கை கால் மூட்டுகளில் இருக்கும் கருமையை போக்க சிறிதளவு சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு கலந்து அதை மூட்டுகளில் மெதுவாக ஸ்கிரப் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி வைட்டமின் ஈ ஆயிலை கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மூட்டுகளில் இருக்கும் கருமை நீங்கி உங்களது சருமம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
முழங்கால் கைகளில் இருக்கும் கருமையை போக்க பசுந்தயிரில் சிறிதளவு மஞ்சள் தோல் மற்றும் தேன் கலந்து அந்த பேஸ்ட்டை உங்களது முட்டிகளில் தடவி நன்கு காய விடவும். நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.